ss

Friday, March 23, 2012

உழவும் விதைப்பும்

கிராமப் புறங்களில் உள்ள முப்பது வயதுக்குக் குறைவான வயதுடைய இளைஞர்களில் பெரும்பாலோருக்கு ஏர் பிடிக்கத் தெரியாது என்பதும் விதை விதைக்கத் தெரியாது என்பதும் கசப்பான உண்மையாகும்!




ஏர் பிடிக்கத் தெரியாமல் போனதற்கு காரணம் கால் நடைகளின் பயன்பாடு குறைந்துபோனதும் அவற்றிடம் வேலை பழக்கவும் வேலை வாங்கவும் ஆட்கள் இல்லை என்பதும் ஆகும்.

விதை விதைக்கத் தெரியாமல்போனதற்குக் காரணம் மானாவாரி விவசாயமும் விவசாயி விதை சேமித்து வைக்கும் பழக்கமும் ஒழிந்துபோனதே ஆகும்!

இதன் விளைவாக அளவுக்கு மிஞ்சிய இயந்திரங்கள், ரசாயன உரம், பூசிக் கொல்லிகள் ஆகியவற்றின் பயன்பாட்டால் நிலங்கள் களர்த் தன்மைக்கு மாறிவருகின்றன என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும்!

இது எங்குபோய் முடியுமோ என்று நினைத்தால் அச்சமாக உள்ளது! 

1 comment:

  1. இந்தியாவில் மட்டுமே விவசாயத்தில் அறிவியல் உபகரணங்களின் பயன்பாடுகள் குறைவாக உள்ளது என நினைக்கிறேன். வேளாண்மை தான் பெரும்பான்மை மக்களின் தொழிலாக இருந்தது. இருந்தாலும் இன்று சாமூக சிந்தனை அற்ற, சுய நல அரயல்வதிகளின் ஆட்சி அதிகாரத்தால் வேலன்மைக்கு முன்னுரிமை அளிக்காமல் விட்டத்தின் விளைவு படிப்பறிவு அற்ற விவசாயிகள் தங்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க வேறு வழியை நோக்கி செலுத்தினர், அவ்வழி சென்றவர்களில் நானும் ஒருவன். இருப்பினும் வாழ்க்கை என்பது பல்வேறு வழிகள் பிணைக்கப்பட்ட ஒரு வலை, அதில் சிறந்த ஒரு வழியை தேர்ந்தெடுத்து அதில் பயணம் செய்ய முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது!

    ReplyDelete