ss

Wednesday, March 28, 2012

சிறு கதைகள் ( 5 )


யார் சிறந்த தம்பதி?..


அந்த ஊர் திருவிழாவையொட்டி ஏற்பாடு செய்திருந்த சிறந்த தம்பதி யார் என்ற தேர்வுக்கு கடைசி சுற்றுக்கு இரண்டு தம்பதியினர் வந்திருந்தனர்.

அவர்களில் முதல் தம்பதியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

வயதான காலத்தில் உங்களில் யார் முதலில் காலமாக விரும்புகிறீர்கள்?

இருவருமே நான் நான் என்றார்கள்.

காரணம் கேட்கப் பட்டது.

ஆண்: அவங்களை விட்டுவிட்டு என்னால் ஒரு நிமிடம்கூட வாழ முடியாது.

பெண்: நான் பொட்டோடும் பூவோடும் அவர் இருக்கும்போதே போய்விட வேண்டும்.

பலத்த கரவொலி எழுந்தது.

அடுத்த தம்பதியிடம் அதே கேள்வி கேட்கப்பட்டது.

இருவருமே மவுனமாக இருந்தனர்.

மக்கள் வியந்தனர். கடைசி சுற்றுக்கு வந்து கோட்டை விட்டார்களே என்று.

பெண்: நான் இல்லாவிட்டால் அவரை யார் என்னளவு கவனிப்பார்கள்? எனவே அவருக்குப் பணிவிடை செய்ய நான் இருக்கவேண்டும்.

ஆண்: காலம் பூராவும் எனக்குக் குறைவில்லாமல் பணிவிடை செய்த அவங்களுக்குக் கடைசி நேரத்தில் நான் இருந்து பணிவிடை செய்யவேண்டும்.

கரவொலி விண்ணைப் பிளந்தது. அவர்களுக்குத்தான் பரிசு என்பதைச் சொல்லவும் வேண்டுமா?....

3 comments:

  1. நண்பர் சுபாஷ் அவர்களே,
    உங்கள் கட்டுரைகள் அனைத்தும் அருமை.
    அவை உங்கள் வாழ்வின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளதால் காலங்கள் பல கடந்தும் வாழும் தகுதி படைத்தவை.இதைத்தான் உங்களிடம் எதிர்பார்த்தேன்
    சிறப்பாக செய்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் அரும்பணி.

    ReplyDelete
  2. நன்றி! நன்றி நண்பரே!

    ReplyDelete
  3. உண்மை அன்பு அடுத்தவர்களை பற்றி சிந்திக்கும்.

    ReplyDelete