படைப்பு
ஒரு படைப்பாளி அவன் கவிஞாக இருந்தாலும் எழுத்தாளனாக இருந்தாலும். அவன் சரியாக சிந்திக்கத் தெரிந்தவனாக இருந்தால் அவன் காண்பதெல்லாமே அவனுக்குக் கருப்பொருளே!
உதாரணத்துக்கு தெருவில் நீங்கள் போகும்போது குழாயடியில் பெரிய வாய்ச்சண்டை நடக்கிறது. அருகே இரண்டு நாய்கள் படுத்திருக்கிறது. அதையும் பார்க்கிறீர்கள். நீங்கள் சரியாகச் சிந்திக்கத் தெரிந்தவராக இருந்தால் அங்கே ஒரு கவிதை வரவேண்டும். நானாக இருந்தால் ....
இவைகள் ஓய்வெடுத்துக்கொண்டு அவர்களைப் பணிக்கு நியமித்தனவோ என்ற பொருள்பட ஒரு கவிதையை எழுதிவிடுவேன்.
அதே மாதிரி முரண்படுகின்ற ஒவ்வொன்றையும் தனது படைப்புக்கான கருப்பொருளாக்கி அழகியலோடு படிக்கவேண்டும் அதுதான் படைப்பு!
அது காதலாக, வீரமாக, சோகமாக, கடமையுணர்வுமிக்கதாக எப்படிவேண்டுமேன்றாலும் இருக்கலாம். ஆனால் படிப்போர் மனதை ஊடுருவவேண்டும்.
பண்டம் அது வைக்கப்பட்டிருக்கும் பாத்திரம் இரண்டுமே சிறப்பாக இருந்தால்தான் அந்தப் பண்டத்துக்கு உண்மையான சிறப்பு.
அதுபோல் ஒரு படைப்பாளி சொல்லும் பொருளும் சொல்லும் விதமும் இரண்டுமே சிறப்பாக இருந்தால்தான் படைப்பு உயர்ந்ததாக மதிக்கப்படும்.
No comments:
Post a Comment