ss

Saturday, April 7, 2012

கடவுளும் மதமும் (1)


மதங்கள்

உலகில் எத்தனையோ கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்தல், மக்களை அதிகாரத்தின் மூலம்  கொள்ளையடித்தல், ஏமாற்றுதல், அப்பாவிமக்கள்மீது குண்டுவீசிக் கூட்டங் கூட்டமாகக் கொலை செய்தல் என பலவகையான குற்றச் செயல்கள் நடக்கின்றன.

இந்தக் குற்றச் செயல்களின் பொதுப் பண்பு என்னவென்றால் இத்தகைய குற்றங்களை அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் செய்கிறார்கள் என்பதே! இதை யாராவது மறுக்க முடியுமா?




இவற்றில் பல குற்றவாளிகள் பல குற்றங்களைத் தம்மிடையே உள்ள மத வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றுபட்டுக் கூட்டாகவும் செய்கிறார்கள்.

இத்தகைய குற்றவாளிகள் எல்லாம் தமக்குள் இருக்கும் மதபேதங்ளை மறந்து ஒன்று பட்டுத் தவறு செய்யும்போது உலக மக்களுக்கு வழிகாட்டுவதாகச் சொல்லும் மதங்களின் தலைவர்களும் முன்னோடிகளும் மட்டும் ஏன் தங்களுக்கு இடையே அவர்கள் மற்றவர்களுக்குப் பரப்புகின்ற நல்ல நெறிகளின் கீழ் ஒன்று படமுடியவில்லை?

அதுமட்டுமல்ல இதுவரை எந்த மதமாவது நாட்டுமக்களின் ஏகமனதான கருத்தாக குற்றவாளிகள் என்று அறியப்பட்டவர்களையாவது இவர் எங்கள் மதத்திலிருந்து நீக்கப்பட்டார் என்றோ அதுபோன்ற குற்றவாளிகள் தங்கள் மத தர்மங்களுக்கு எதிரானவர்கள் என்றோ அத்தகைய குற்றம் செய்பவர்கள் தங்கள் மதத்தில் இருக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றோ இதுவரை அறிவித்தது உண்டா?

ஆம் என்று சொன்னால் அதில் ஓரளவு நியாயமிருக்கிறது என்று சொல்லலாம். இல்லை என்று சொன்னால் அப்படிப்பட்ட மதங்களின் உண்மையான குணங்களைக் கண்டு கொள்ளாமல் பொய்யான பிரச்சாரங்களை நம்பி தலைமுறை தலைமுறையாக ஏமாந்த வாழ்வு வாழ்வதும், மோசம் போவதும் தங்களுக்குள்ளேயே பகைமை உணர்வுடன் வாழ்வதும் நியாயம்தானா?

இந்த மதங்கள் மக்களுக்கு வழிகாட்ட இருக்கின்றனவா? அல்லது வழிகாட்டுவது என்ற பெயரால் மக்களுக்கு இடையே பகைமை உணர்வை ஊட்டுவதன் மூலம் என்றென்றும் பிளவு படுத்தி மக்களின் துன்ப துயரங்களுக்குக் காரணமானவர்களுக்குச் சேவை செய்கின்றனவா?

கொஞ்சம் சிந்திக்கலாமே!

No comments:

Post a Comment