ss

Wednesday, April 11, 2012

கூடங்குளமும் நானும் ( 1 )



Nov 22, 2011ல் -- நான் ஆர்குட்டில்எழுதியது  


அணு சக்தியைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் அனுகுண்டாக இருந்தாலும் சரி அணுமின்சார நிலையமாக இருந்தாலும் சரி, அல்லது வேறு எதுவாக இருந்தாலும் அது ஆபத்தானதே!

ஆனால் கூடங்குளம் அணுமின்சார நிலையத்தை நிறுத்துவது என்பது மற்ற நிலையங்களையும் சேர்த்து நிறுத்துவதைப் பொறுத்தது! 

அத்தகைய பொருளாதார பலமோ மாற்றுத் திட்டகளோ அரசியல்நேர்மையோ மக்கள்நலனில் அக்கறையோ இல்லாத அரசுகளிடம் இருந்து அத்தகைய செயல்பாடுகளை எதிர்பார்க்க முடியாது!

முடிந்தவரை பார்ப்பார்கள். அப்புறம் ராம்தேவ் போராட்டத்தைச் சந்தித்தமுறையில் சந்திப்பார்கள்!

அதற்க்கு ஒரே வழி நாடுதழுவிய போராட்டங்கள்தான்! இது நடக்குமா?....

அப்படி நடக்காவிட்டால் வெள்ளைக்காரன் பயன்படுத்திய அதே பிரித்தாழும் நரித் தந்திரத்தை இவர்களும் பயன்படுத்திப் போராட்டங்களை பலவீனப்படுத்திப் பின்பு நசுக்குவார்கள்.



- Nov 23, 2011
கூடங்குளம் போராட்டத்தின் வெற்றி என்பது சில அம்சங்களைச் சார்ந்தது என்பதை கணக்கில்கொள்ள வேண்டும்.


முதலாவது கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடவேண்டும் என்று சொல்வதற்கு என்னென்ன காரணங்கள் சொல்லப்படுகிறதோ அவை அனைத்து அணுமின் நிலையங்களுக்கும் பொருந்துமாதலால் அவற்றையும் மூடவேண்டும். அப்போதுதான் சட்டப்பிரச்சினை வராது!

இரண்டாவது அணுமின் நிலையங்களைச் சார்ந்து இருக்கிற மின்சாரத் தேவைக்கு மாற்று வழி உத்திரவாதப்படுத்தப்பட வேண்டும்.

மூன்றாவது நாட்டின் பொருளாதாரம் பல ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான கோடி ரூபாய் இழப்பைத் தாக்குப்பிடிக்கக் கூடியதாக இருக்கவேண்டும். குறைந்தபட்சம் அதற்கான திட்டமாவது இருக்க வேண்டும்.

நான்காவது மக்கள் நலனில் அக்கறையுடைய அரசுகளாக இருக்கவேண்டும். அல்லது அரசை நிர்பந்தித்து இணங்கச்செய்யும் அளவு மக்கள் ஒற்றுமையும் போராட்டங்களும் இருக்கவேண்டும்.

நாடுமுழுக்க அணுசக்திப் பயன்பாட்டுக்கு எதிரான அமைப்புரீதியான ஒழுங்கமைந்த இயக்கம் இருக்கவேண்டும்.

மக்கள் சாதிமத இன பேதங்களை மறந்து ஒன்றுபடவேண்டும்.

இவைகளைத் தவிர்த்த போராட்டங்கள் வெற்றிபெறாது. அரசின் அடக்குமுறைக்கு முன்னால் தாக்குப்பிடிக்காது!

அப்படி ஒரு திட்டம் நாட்டில் இருக்கிறதா?.....


No comments:

Post a Comment