ss

Monday, April 16, 2012

காதல் ( 1 )உண்மைக் காதல்  


உண்மையான காதல் என்றால் எப்படி இருக்கும் என்று யானையைப் பார்த்த குருடர்போல் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகக் கற்பனை செய்துகொண்டு பெரும்பாலோர் வீணாய்ப் போய்க்கொண்டு இருக்கிறர்கள்! 


அறிவுபூர்வமான காதலுக்கு இணையானது வாழ்வில் வேறு எதுவும் இருக்க முடியாது!


சினிமா வக்கிரங்களைத்தான் இப்போது நிறையப்பேர் காதலென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்! உண்மையாகக் காதலிப்பவர்கள் வெட்கித் தலைகுனியும் படிதான் நடப்புக் காதலின் யோக்யதை இருக்கிறது!


அழகான காதலுக்கு அடிப்படைத் தேவையான நாணம் தற்காலப் பெண்களிடமோ ஆண்களிடமோ காணமுடிவதில்லை! அதனால் தாழம்பூவாய் மணக்கவேண்டிய காதல் காகிதப் பூக்களாய் சிறுமைப்பட்டுப்போனது!


சினிமாவிலும் அற்புதமான காதல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.ஆனால் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது கீழ்த்தரமான பாலுணர்வுக்கு முக்கியத்துவம் தரும் நடவடிக்கைகளே!


எனக்குத் தெரிந்த மதிக்த்தக்க சில காதல் வகைகளைச் சொல்கிறேன்.

முதலாவது பெற்றோர் சம்மதத்துடன் வாழ்வில் இணைந்து மகிழ்ச்சியுடன் வாழும் வாய்ப்புள்ள காதல்

இரண்டாவது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி வாழ்வில் இணைந்து போராடி வாழ்ந்து இன்பம் துன்பம் இரண்டையும் அடையும் வாய்ப்புள்ள காதல். 

மூன்றாவது காதலித்தபின்பு வாழ்வில் இணைந்து நிம்மதியாக வாழும் வாய்ப்பு இல்லை என்று தாமதமாக உணர்ந்த இருவரும் மனமொப்பிப் பிரிந்துவிடுவதும் பின்பு எங்கிருந்தாலும் நல்லபடி வாழவேண்டும் என்ற எண்ணத்துடன் வாய்ப்புக் கிடைத்தால் பரஸ்பரம் உதவி செய்து வாழ்வது.

நான்காவது காதலித்து அந்தக் காதலை எந்தவகையிலும் வெளிப்படுத்தாமல் வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்து அது கைகூடாமல் போனநிலையில் அதை இனிய நினைவுகளாக எண்ணி வாழ்நாள் முழுவதும் மனதால் நினைத்துப்பார்த்து மகிழ்வது.


இந்த வகைகள் அனைத்தும் உள்ளத்தளவிலானவை. பிறருடைய கவனத்தை ஈர்க்காதவை. மரியாதைக்குரியவை!

மற்றபடி காதலுக்காக உயிரை விடுவது உயிரை எடுப்பது சாகும்வரை வேறெருவரை மனதாலும் நினைக்காமல் வாழ்வது போன்றவை யெல்லாம் நடைமுறைவாழ்வுக்குப் பொருந்தாத தேவையில்லாத அபத்தங்கள்!


கண்களுக்கு பேசும் சக்தி அளிப்பதில் காதலுக்கு நிகர் வேறில்லை! வாயால் அதிகம் பேசுவதால் தற்காலக் காதலர்களின் கண்கள் பெரும்பாலும் பேசும் சக்தியை இழந்துவிட்டன!


காதல் வாழ்வின் ஒருபகுதி அதுவும் சரியாக அமைந்தால் மட்டும் ஒத்துவரக்கூடிய பகுதி என்கிற அளவு இனிய நினைவுகள் அளவில் காதலிப்பவர்கள் அது கைகூடினால் மகிழ்வார்கள் கைகூடாத பட்சத்தில் பரஸ்பரம் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என்ற எண்ணத்தில் மூழ்கி மனதை ஆறுதல்படுத்திக்கொள்வார்கள்.

ஆனால் காதலித்துவிட்டால் அதுமட்டும்தான் வாழ்க்கை என்கிற அளவில் தம்மை இழந்து விடுபவர்கள் அது கைகூடாமல்போகும்போது அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ளும்
சக்தியை இழந்து சோகமான முடிவை தேடிக்கொள்கிறார்கள். 

அது பலமல்ல பலவீனம்! அதற்குப் பெயர் தெயவீகக் காதலுமில்லை, புடலங்காயுமில்லை

வாழ்வை வளப்படுத்துவதுதான் காதல். சாவுக்கு அழைத்துச் செல்வது காதலே அல்ல!

No comments:

Post a Comment