ss

Wednesday, April 11, 2012

இயற்கை ( 1 )


ஆலும் வேலும்

காலையில் எழுந்து முதலில் பல் துலக்கும்போதே இயற்கை அன்னையை நினைக்கலாமே!

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பார்கள். ஆதாவது ஆலமரத்தின் விழுதும் கருவேலமரத்தின் குச்சியும் கொண்டு பல் துலக்கினால் பற்கள் மிகவும் வலிமை பெறும் என்பது பொருள்.

நகரத்தில் ஏங்கே போவது என்று எண்ணவேண்டியது இல்லை. நாட்டு மருந்துக்கடைகளில் கருவேலம்பட்டை பொடி கிடைக்கும்( பற்பொடி அல்ல ) மலிவானதும்கூட. அத்துடன் வேப்பங் குச்சியைப் பயன்படுத்துவதும் மிகவும் நல்லது. அதுதான் எங்கும் கிடைக்குமே. வேம்பு முதலில் கசப்பதாகத் தோன்றும் பழகிவிட்டால் சரியாகிவிடும்.

இவற்றை உபயோகிப்பதால் பல் துலக்கப்படுவது மட்டுமல்ல நம்மை அறியாமலே விழுங்கப்படும் அதன் மூலிகைச் சத்து நமது உடலுக்குப் பல்வேறு வகைகளில் நன்மை பயக்கும்!

ஒருகாலத்தில் ஈறுகள் மிகவும் பலவீனமாகி ரத்தக்கசிவுகூட இருந்தது. ஆனால் இப்போது ஒரு மணிநேரத்தில் இரண்டு முழு கரும்பை அப்படியே கடித்துத் தின்ன முடியும். அதற்குக் காரணம் வேலங்குச்சி, வேப்பங்குச்சி இவற்றால் பல் துலக்கியதுதான்!

No comments:

Post a Comment