ss

Thursday, April 5, 2012

எனது மொழி (2)


பெருமை!   

பொதுவாக மக்கள் அவர்கள் ஆண்களாயினும் பெண்களாயினும் பிறரிடம் இல்லாத வசதி, நகை, ஆடம்பர உடைகள், சொத்துசுகம், பதவி, அதிகாரம் போன்றவற்றைக் காட்டிப் பெருமைப்படவே விரும்புகிறார்கள். அதைத்தான் உயர்வான வாழ்க்கை என்றும் கருதுகிறார்கள்.

உண்மையில் அது மிகவும் இழிவான வாழ்க்கை ஆகும். காரணம் அவை மற்றவர்கள் மனதில் எந்தவிதமான உயர்ந்த எண்ணங்களையும் உருவாக்குவது இல்லை! மாறாகத் தேவையில்லாத மற்றவர்க்குத் தீங்கு விளைவிக்கும் எண்ணங்களையே உருவாக்குகின்றன.

தவிர அத்தகைய இழிவான பெருமையைக் கூட வசதி படைத்தோர் மட்டுமே அனுபவிக்க முடியும்.

ஆனால் அன்பு, உயர்ந்த ஒழுக்கம், உதவி மனப்பான்மை, இரக்கம், தியாக உணர்வு, பொதுநலனில் அக்கரை, உயர்ந்த சிந்தனை போன்ற பிறரிடம் இல்லாத சீரிய பண்புகள் தன்னிடம் இருப்பதை எண்ணி யார் வேண்டுமானாலும் பெருமைப்படலாம்!

உண்மையில் அதுதான் பெருமைக்குரிய வாழ்க்கை ஆகும். காரணம் அவை மற்றவர்கள் மனதில் எந்த விதமான கசப்புணர்வையும் தீங்கு விளைவிக்கும் எண்ணங்களையும் உருவாக்குவது இல்லை. மாறாக உயர்ந்த எண்ணங்களையே வளர்க்கின்றன.

தவிர அத்தகைய பெருமையை அடைய ஒருவர் வசதியானவராகத்தான் இருந்தாக வேண்டும் என்ற அவசியமும் இல்லை. மிகவும் எழைகூட அத்தகைய போற்றத்தக்க வாழ்வு வாழ முடியும்!



No comments:

Post a Comment