கிணறும் வெடிமருந்தும்
கிணறுகள் தோண்டுவதற்கும் அதற்கு வெடிமருந்தைப் பயன்படுத்துவதற்கும் அரசின் அனுமதி பெறவேண்டும் என்பது சட்டம்.
நாட்டில் உள்ள லட்சக்கணக்கான கிணறுகள் எல்லாம் எப்போது தொண்டப்பட்டவை என்று அரசுப் பதிவேடுகளில் இருக்கின்றன.
அப்படியானால் அந்தக் கிணறுகள் வெட்டப்படவும் வெடிமருந்து பயன்படுத்தவும் வழங்கப்பட்ட அரசு அனுமதியும் பதிவாகியிருக்கவேண்டும்.
உண்மை என்னவென்றால் ஒரு விவசாயக் கிணறுகூட சட்டப்படியான அனுமதி பெறப்பட்டு வெட்டப்படுவது இல்லை. காரணம் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பதுதான்.
அப்படியானால் அரசின் பார்வையில் அனுமதி இல்லாமல் எப்படி இத்தனை கிணறுகள் வெட்டப்படுகின்றன? அவற்றுக்கு வெடிமருந்து எப்படிக் கிடைக்கிறது? கிணறு வெட்டப் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகள் எல்லாம் எந்த வகையில் செலவானதாக பதிவு செய்யப்படுகிறது?
தெரிந்தால் சொல்லுங்கள்!
No comments:
Post a Comment