நில்! கவனி! சாப்பிடு!
போக்குவரத்து நிறைந்த பாதையைக் கடக்கும் போது நாம் என்ன செய்கிறோம்? முதலில் நின்று கவனித்துச் சரியான தருணத்தில் சரியான வேகத்தில் கடந்து செல்கிறோம். அப்போதுதான் நமக்கோ நம்மைப்போன்ற மற்ற பாதசாரிகளுக்கோ எந்த இடையூறும் இருக்காது.
ஆனால் நாம் நமக்குத் தேவையான உணவை உண்ணும்போது மட்டும் அத்தகைய எச்சரிக்கை உணர்வை ஏன் பின்பற்றுவதில்லை?
பசியானாலும் ஆகாவிட்டாலும் தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது நல்லதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பழக்கத்தின் காரணமாக நாவின் சுவையுணர்வுக்கு அடிபணிந்து கண்டதைத் தின்று தீர்க்கிறோம்.
அத்தகைய உணவுப்பழக்கமே நம்மை பல நோய்களில் தள்ளி வாழ்வின் பொருளையே பொருளற்றதாகச் செய்துவிடுகிறது. அதனால் நாம் உணவு உண்ணவோ ஏதேனும் பானங்கள் பருகவோ நினைக்கும்போது சில முன்னெச்சரிக்ககைகளை மனதில் கொண்டால் அதனால் வரும் தீங்குகளைத் தவிர்த்துச் சுகம் பெறலாம்.
இப்போது உணவு உண்ணுமளவு போதுமான பசியோடு இருக்கிறோமா?
இப்போது நாம் உண்ண நினைக்கும் உணவு சரியான உணவுதானா?
அதை உண்ணாமல் தவிர்க்கவே முடியாதா?
அந்த உணவு உடல் நலனக்கு ஏற்ற உணவுதானா?
அதன் இயற்கைக் கட்டமைப்பு சிதைக்கப்படாமல் வேதியியல் பண்பு ஏற்றப்படாமல் தீங்கு விளைவிக்க்கூடியதாக இல்லாமல் உள்ள நல்லுணவுதானா?
இந்தக் கேள்விகளை மனதுக்குள்ளேயே கேட்டு;பபார்த்துப் பதில் சாதகமாக இருந்தால் மட்டுமே உண்ணவேண்டும் அல்லது பருகவேண்டும் இல்லாவிட்டால் எந்த அம்சத்தில் குறை இருக்கிறதோ அந்த அம்சத்தை சரிசெய்து அல்லது சரியானபின்பு சரியான நிலையில் சரியான உணவை உண்பதே மேலான உடல்நிலைக்கு உகந்த செயல் ஆகும்.
அத்தகைய உணவு அல்லது பான வகைகளில் மிகவும் சிறந்தது இயற்கை உணவுகளும் இயற்கையில் கிடைக்கும் பானங்களுமே ஆகும்!
No comments:
Post a Comment