ss

Friday, April 20, 2012

நாம் யார் தெரியுமா? ( 5 )




நாம் ஏன் தோன்ற வேண்டும்?


ஆமாம் நாம் ஏன் தோன்றினோம்? நாம் தோன்றுவதற்கு முன்பு பூமி எப்படி இருந்ததோ அப்படியே இருந்துவிட்டுப் போகவேண்டியது தானே? இவ்வளவு மாறுதல்களும் பிரளயங்களும் ஏற்பட்டு பூமி குளிர்ந்து உயிரினங்கள் தோன்றி அதில் ஒன்றாக நாமும் தோன்றி அப்புறம் பரிணாம வளர்ச்சி அது இது என்று இவ்வளவு நெடும் பயணம் எதற்காக?

முதலில் ஒன்றை நாம் நினைத்துப் பார்க்கவேண்டும். ஆதாவது நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொருவிதமாக ஆக்கப்பட்டுள்ளது. கல், மண், நீர், காற்று, தாவரங்கள், உயிரினங்கள், ஆறுகள், கடல்கள், மலைகள், ஏன் இந்தப் பூமியில் நாம் கண்ணால் காண்கின்ற அல்லது காணமுடியாமல் வேறு வகையில் இருக்கின்ற அத்தனை பொருட்களும் எதனால் ஆக்கப்பட்டன? நாம் குடியிருக்கும் வீடு கட்டும்போது எத்தனை விதமான பொருட்களைக் கொண்டு கட்டுகிறோம்? ஒரு வாகனம் சாலையில் ஓடுகிறது என்றால் எத்தனைவிதமாக பொருட்களை எத்தனை விதமாகச் சேர்த்து எத்தனைவிதமான தொழில் நூட்பத்தையெல்லாம் கையாண்டு அதைச் செய்யவேண்டியிருக்கிறது? 

அப்படியானால் நமது தோற்றமும் நாம் வாழும் பூமியின் தோற்றமும் ஒரு விதமான கட்டமைப்புதானே? எதால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது?

இந்த இடத்தில் நாம் இனியொன்றை நினைவில் கொள்ளவேண்டும். உலகில் நாம் காணும் அனைத்தும் பிறவற்றால் கட்டப்பட்டது என்பது தெரிந்ததே. ஆனால் அந்த எல்லாமே ஒரேவகையான பொருளால்தான் கட்டப்பட்டது என்பதும் உண்மை! அதுதான் அணு. அதைக்கூட மொத்தமாக அணு என்று சொல்வதுகூடத் தவறு. ஏனென்று சொன்னால் எல்லா அணுக்களும் ஒரேமாதிரிக் கட்டமைப்புடன் கூடியவை அல்ல. அவையும் நூற்றுக்கும் மேற்பட்ட விதங்களில் கட்டப்பட்டுள்ளது. உலகில் எத்தனை விதமான மூலகங்கள் உள்ளனவோ அத்தனைவிதமான அணுக்கள் உள்ளன. கிட்டத்தட்ட முன்னூறு வகையான மூலகங்கள் இருந்தாலும். நடைமுறையில் மிக அதிகமாகப் பயனில் உள்ளதும் இயற்கையில் நாம் கண்டுபிடித்துள்ளதுமான ஏறக்குறைய நூறு மூலகங்களைச் சொல்லலாம் என்று எண்ணுகிறேன்.

இந்தமூலகங்களின் கட்டமைப்பு எப்படி ஒரேவிதமான அணுக்களால் ஆனதோ அதேமாதிரி அவற்றின் வேறுபாடுகளையும் அந்த வேறுபட்ட அணுக்கள்தான் தீர்மானிக்கின்றன. அப்படியானால் அந்த அணுக்களே வேறுபட்ட குணங்களை உடையவை என்று ஆகிறது. அணுக்களின் வேறுபட்ட குணங்களை எது தீர்மானிக்கிறது? அணுக்கள் எவற்றால் கட்டப்பட்டவையோ அந்த எலெக்டரான் புரோட்டான் நீயூட்ரான் ஆகியவைதான் தீர்மானிக்கின்றன. அதிலும் ஒவ்வொரு அணுவின் பண்புகளையும் அவற்றுள் இருக்கும் புரோட்டான்களின் எண்ணிக்கையே தீர்மானிக்கின்றன. நியூட்ரான்கள் மின்னேற்றமில்லாது அணுவின் எடையைத் தீர்ர்மானிக்கமட்டும் பயன்படுகின்றன. அவையும் இரண்டாகப் பிளப்பதன் மூலம் அணுவின் எண்ணை மாற்றவும் பயன்படுவதுண்டு.

அந்த அணுக்கள் ஒரே எண்ணுடையவையாக இருக்கும் போது ஒரே மூலகமாக இருக்கின்றன. அதே அணுக்கள் வேறு எண்ணுடையவற்றுடன் சேரும்போது வேறுபட்ட குணங்களுடைய கூட்டுப்பொருள்களாக மாறுகின்றன. வௌ;வேறு பண்புகள் உடைய எத்தனை அணுக்கள் எந்த விகிதத்தில் சேர்கின்றன என்பதைப் பொறுத்து அவற்றால் உருவாகும் கூட்டுப்பொருட்களும் வேறுபட்டவையாக இருக்கின்றன.

அணுக்களைக்கூட இத்தனை விதமானவை என்று ஏறக்குறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ள அடிப்படையில் சொல்லலாம். ஆனால் அந்த அணுக்களால் கட்டப்பட்ட கூட்டுப்பொருட்களைக் கணக்கிடவே முடியாத அளவு எண்ணற்றவை ஆகும். காரணம் சாராரணமாக பூஜ்யத்தில் இருந்து ஒன்பது வரையான பத்து எண்களைக்கொண்டு எண்ணற்ற எண்களை உருவாக்குகிறோம். அப்படி இருக்கும்போது கிட்டத்தட்ட முன்னூறு மூலகங்கள் இருக்கும் நிலையில் அவற்றின் மூலம் உருவாக்கப்படும் கூட்டுப்பொருட்கள் எத்தனைவிதமானது என்று எப்படிக் கணக்கிட முடியும்?

ஆகவே அணுக்களின் பொருத்தமான சேர்மானத்தால் உருவாகும் பொருட்களால்தான் இந்தப் பூமியும் இதில் இருக்கும் அத்தனையும் உருவாக்கப்படுகின்றன. அதுமட்டுமல்ல நமது பூமியும் சூரியமண்டலமும் உள்ளடங்கிய இப்பிபஞ்சத்தில் உள்ள அத்தனையும் இந்த அணுக்களால் ஆனவையே!

அந்த அணுக்களால் ஆன பொருட்களும் அந்தப் பொருட்களாலான அத்தனையும் என்பதில் உயிரினங்களும் அடங்கும். அணுக்களால் ஆன பொருட்கள்தான் அத்தனையும் என்கிற அதேநேரத்தில் அந்தப்பொருட்கள் அத்தனையும் வேறுபட்டநிலைகளில் வேறுபட்ட குணங்களுடன்தான் நிலவுகின்றன. திடநிலையிலும் திரவ வாயு என்ற மூன்று நிலைகளோடு இன்னும் சில வேறுபட்ட நிலைகளிலும் இருக்கின்றன. 

அணுக்களின் உட்கூறுகள் அணுக்களாகின்றன. அணுக்கள் பொருட்களாகின்றன. அந்தப்பொருட்களும் வேறுபட்டநிலைகளில் சேர்ந்தும் பிரிந்தும் வேறுவேறு பொருட்களாக மாறி இயங்கிக்கொண்டே உள்ளன. அந்த இயக்கத்தின் ஒரு பகுதியாகத்தான் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளுடன் மூன்றாவதான உயிரியல் பண்புகளும் தோன்றி உயிரினங்கள் உருவாகின்றன. ஒரு பொருள் இன்னொரு பொருளாக மாறுவதற்கு அவற்றுக்கு ஏற்புடைய விகிதப்படியான சேர்மானமும் தட்பவெப்பநிலையும் பொருத்தமான சூழலும் எப்படி அவசியமோ அதேமாதிரி இன்னும் ஏற்புடைய சூழல்களில் ஏற்புடைய மூலப்பொருட்கள் ஏற்ற விகிதங்களில் நிலவும் சூழலில் உயிரினங்கள் தோன்றுகின்றன. அவை முந்தைய பகுதிகளில் குறிப்பிட்டுள்ள இரண்டாம் சுற்று இயக்கமான உயிரியல் பண்புகளைப் பெறுகின்றன.

அத்தகைய ஏற்றசூழல்கள் நமது பூமியில் உருவானதால்தான் இங்கு உயிரினங்களும் தோன்றமுடிந்தது. மனித இனமாகிய நாமும் தோன்றினோம். பரிணாம வளர்ச்சியின் காரணமாக வாழும் உயிரினங்களிலேயே மிக்க வளர்ந்த அறிவுள்ள உயிரினமாகவும் மற்ற எல்லா உயிரினங்களையம் விட வலிமைமிக்க, பிறவற்றின் வாழ்வையும் அழிவையும் தீர்மானிக்கக்கூடிய அளவு சக்திமிக்க இனமாக விளங்குகிறோம்.

அடுத்து நாம் அணுக்களாலான பொருட்களாலானவர்கள் என்பது சரி! ஆனால் அந்த அணுக்களும் பொருட்களும் நிலையாக நம்மிடம் இருக்கின்றனவா? நிச்சயம் இல்லை. அப்படியானால் நமது உடல் எப்படி நிலைபெறுகிறது? ஒவ்வொரு விநாடியும் கோடிக்கணக்கான அணுக்கள் நமது உடலில் சேர்கின்றன. அதேமாதிரி கோடிக்கணக்கான அணுக்கள நம்மைவிட்டு வெளியேறுகின்றன. ஏன் அப்படி? அப்படித்தான் நடந்து ஆகவேண்டும் பொருத்தமானதை எடுத்துக்கொண்டு பொருத்தமில்லாததை வெளியேற்றித்தான் நாம் வாழ்கிறோம். இது எப்பொழுதாவது நடக்கும் காரியம் அல்ல. இடைவிடாமல் நடந்து கொண்டே இருப்பது.

நமது உடலில் இடைவிடாத மாற்றம் நிகழ்ந்துகொண்டே இருப்பதால் நமது உடம்பு ஒரே மாதிரி நிலையான ஒன்று அல்ல. குறிப்பிட்ட விதத்திலான குறிப்பிட்ட பொருட்களாலானதுதான் உடலின் கட்டமைப்பு. அந்தக் கட்டமைப்புதான் வாழும் காலம் வரை நிரந்தரமே அல்லாமல் உடலின் அடிப்படை உட்கூறுகள் எதுவும் அல்ல. அப்படியானால் நமது உடம்பு உயிர்வாழ்வதாலும் அதனுள் நடக்கும் உயிரியல் செயல்பாட்டாலும் அதன் எண்ணஓட்டத்தாலும் தான் இன்னார் என்று இனம் அடையாளம் காட்டப்படுகிறதே அல்லாமல் நாம் என்பதற்கு நிரந்தரமான பொருளியல் அடையாளம் எதுவும் இல்லை.

உயிர் வாழ்வது, உயிரியல் செயல்பாடு, எண்ண ஓட்டம் இவை இல்லாமல் போவதால் இறந்தபின்பு சிதைந்துபோகிறோம். அதனால் இன்னார் என்று காட்டக்கூடிய அடையாளத்தை இழந்து விடுகிறோம். அதனால் எந்த இயற்கை நாம் உருவாவதற்குக் காரணமாக இருந்ததோ அந்த இயற்கையுடன் இரண்டறக் கலந்து ஐக்கியமாகிவிடுகிறோம்.


எனவே உயிர் வாழ்தலுக்கும் உயிரின செயல்பாட்டுக்கும் ஏற்புடைய சூழல் பிரபஞ்சத்தில் எங்கிருந்தாலும் அங்கு உயிரினங்கள் தோன்றுவதும் உயிர் வாழ்வதும் அதன் விளைவாக அவற்றின் பண்புகள் வேறுபட்ட விதங்களில் விளங்குவதும் தவிர்க்க முடியாததாகும். 

அதற்கு அப்பால் நிலவும் விருப்பு வெறுப்புகளால் இந்த செயல்பாடு தீர்மானிக்கப்படுவது இல்லை! காரணம் விருப்பு வெறுப்பு என்பது அண்டத்தின் ஒரு புள்ளியாக உள்ள ஒரு பிரபஞ்சத்தின் ஒரு புள்ளியாக உள்ள ஒரு நட்சத்திரத்திரமண்டலத்தின் ஒரு புள்ளியாக உள்ள ஒரு நட்சத்திரக் குடும்பத்தின் ஒரு சின்னஞ்சிறு அங்கமாக உள்ள சிலபல கோளில் வாழும் உயிரினங்களின் பண்பாகும் அது. அது ஒரு அண்டசராசரத்தின் அல்லது பரம் பொருளின் பண்பாகாது.

No comments:

Post a Comment