ss

Sunday, April 15, 2012

எனது மொழி ( 6 )

இயற்கையின் நீதி!

மனிதன் உள்ளிட்ட உயிரினங்களுக்கும் பல்வேறு வகையான தாவர வகைகளுக்கும் நுண்ணுயிர்களாலும் பூச்சிகளாலும் நோய்கள் ஏற்படுகின்றன.

அதன்காரணமாக உயிரினங்களும் தாவர இனங்களும் அளவற்ற சேதத்துக்கு உள்ளானாலும் முடிவில் அப்பூச்சிகளும் கிருமிகளும் அழிக்கப்பட்டு தாம் வாழ்கின்றன.



அதுபோல இப்பூவுலகின் மேல் நோய்க் கிருமிகளைப் போலப் பரந்து விரிந்து பரவி அளவற்ற அழிவைச்செய்து பூமிக்கு ஏற்பட்ட நோய்போல் வாழ்ந்துவரும் மனித இனமும் ஒருகட்டத்தில் இயற்கையின் எதிர்விளைவுகளால் தாக்குண்டு அழிந்து ஒழிந்து போகும்.

அனைத்து உயிரினங்களுக்கும் தாவர இனங்களுக்கும் அடிப்படை ஆதாரமாக விளங்கும் இப்பூமியை மனிதன் தனக்காக மட்டும் பயன்படுத்திக்கொண்டு மற்ற உயிரினங்களையும் தாவர இனங்களையும் அழித்தொழித்தும் அடிமைப்படுத்தியும் வாழ்ந்ததற்குச் சரியான பதிலடி மனித அழிவுதான்.

அன்றுதான் மனிதனைத் தவிர மற்றவற்றிற்கு பூரண விடுதலை கிடைக்கும்.அதுவே இயற்கையின் நீதி!

No comments:

Post a Comment