ss

Saturday, April 21, 2012

நாம் யார் தெரியுமா? ( 7 )


உணர்வும் அறிவும்

சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகி அந்த சூழ்நிலையையே பாதிக்கும் பண்பையே உணர்வு என்று கூறுகிறோம். அதுவும் மனித உணர்வைத்தான் பொதுவாக உணர்வு என்று கூறகிறோம்.

உதாரணமாக வெய்யிலில் நிற்கவேண்டி வருகிறது. அந்த வெப்பம் உடலின் தேiவையைவிட அதிகமாக இருப்பதால் அந்த வெப்பத்தின் மேல் அந்த இடத்தில் எதிர்மறையான எண்ணம் ஏற்படுகிறது. அதன்பின்பு கையில் வைத்திருக்கும் குடையை விரித்துப் பிடிக்கலாம். அல்லது நிழல் உள்ள இடத்துக்கு இடம் மாறலாம். அல்லது அதற்குப் பிறகு அதுமாதிரி வெயிலில் யாரும் துன்பப்படாமல் இருக்க அங்கேயே நிழலை உருவாக்கலாம். அல்லது அதுபோன்ற சிரமத்தைப் பிற இடங்களிலும் படவேண்டாம் என்ற எண்ணத்தால் தேவையான இடங்களில் எல்லாம் நிழல் உருவாக்க வேண்டும் என்று எண்ணுவோரில் தானும் ஒருவராக இடம் பெறலாம். அதன்மூலம் அத்தகைய நடவடிக்கைகளில் தனக்கும் ஒரு தார்மீகப் பங்கு கிடைத்து விடுகிறது.



ஆக வெய்யில் என்று சூழ்நிலை காரணமாக ஏற்பட்ட எதிர்மறையான எண்ணம் அந்த வெய்யிலுக்கே எதிராக வினை புரிகிறது.

ருசியுள்ள பண்டங்களைச் சாப்பிட்டால் அந்த உணர்வு மேலும் அத்தகைய ருசியுள்ள பண்டங்களை உருவாக்கி உண்ணவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும்.

அதுபோல ஒருவர் நமக்கு உதவி செய்திருந்தால் திரும்ப அவர் மகிழும் வண்ணம் அவருக்கு ஏதாவது நாமும் செய்யவேண்டும் என்ற எண்ணம் வரும். அல்லது பொதுவாக உதவி செய்து வாழ்வது சிறப்பானது என்ற எண்ணத்தால் குணமாறுதல் ஏற்படுகிறது.

அழகான வயலைக் கண்டால் தாமும் அதுபோல் பயிர் செய்வேண்டும் என்று எண்ணுகிறோம். நல்லவனைக் கண்டால் நண்பராக்கிக்கொள்ளும் எண்ணமும் தீயவனைக் கண்டால் வெறுப்பும் அதேபோல் பல்வேறு வகையான குணமுள்ள மனிதரைக் காணும்போது அன்பு, பாசம், வெறுப்பு, பகைமை, கோபம், மரியாதை, நன்றியுணர்வு, ஏக்கம், காதல், பொறாமை, கெட்ட எண்ணம் போன்ற அத்தனை எண்ணங்களும் ஏற்படுகின்றன. 

அந்த உணர்வுகள் அந்தந்த சூழ்நிலைகளுக்குப் பொருத்தமாக அவற்றின் மேல் மீண்டும் வினை புரிகிறது. சின்னச் சின்ன விசயங்களில் இருந்து மாபெரும் உலக விசயங்கள் வரை இத்தகைய உணர்வுகள் செயல் புரிகின்றன. எல்லையற்ற புறவெளியும் இதற்கு விதிவிலக்ல்ல. மிகச்சிறிய அணுவும் விதிவிலக்கல்ல. இன்னும் பல்வேறுவிதமான விளைவுகளும் எதிர் விளைவுகளும் பல்லாயிரக்கணக்கில் ஏன் எண்ணற்ற அளவு நிகழ்ந்து கொண்டே உள்ளன. இவை மெய், வாய், கண். மூக்கு, செவி என்ற ஐம்புலன்களின் வாயிலாக உணரப்படுவதும் செயல்படுவதுமாக தொடர்ந்து நடக்கிறது.
தாவரங்களின் உணர்வுகள் மிகமிகத்; குறைந்த தரமுடையவை. உயிரினங்களில் மனிதனைத் தவிர மற்ற அனைத்தும் மிகக் குறைந்த அளவில் இருந்து ஓரளவுவரை உணர்வு கொண்டவை. உணர்வுகளின் தரத்து;ககுத் தக்கபடி அவற்றின் மூளையின் தரமும் வேறுபடுகிறது. அத்தகைய உணர்வுத் தரத்தில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளவனும் மற்ற உயிரினங்களோடு ஒப்பிடமுடியாத அளவு உயர்ந்து விளங்குகின்ற தரமிக்க மூளையும் கொண்டவனும் மனிதனே! 

உணர்வின் உயர்ந்த வடிவத்தை;தான் அறிவு என்கிறோம். மனிதனோடு ஒப்பிடும்பொது அது மற்ற உயிரினங்களிடம் மிக் குறைவாகவும் சில உயிரினங்களிடம் ஓரளவும் மனிதரிடம் மட்டும் எல்லையற்ற அளவும் நிலவுகிறது. அதனதன் உணர்வு எல்லை எவ்வளவோ அதைப் பொறுத்து அறிவு வேறுபடுகிறது. மற்ற உயிரினங்களின் உணர்வு எல்லை மிக் குறுகியது. ஆனால் மனித உணர்வோ எல்லையற்று வியாபித்து நிற்பது. எட்டிய அளவு மனித உணர்வின் எல்லை நீள்வதால் அதன் அறிவும் ஒரு எல்லைக்குட்படாத அளவு நீண்டு செல்கிறது.

பல்வேறுவிதமான சூழ்நிலைகளால் உணரப்படும் உணர்வுகளின், உருவாகும் உணர்வுகளின், சலனத்தால் ஏற்படும் தெளிவே அறிவு எனப்படுகிறது. உணர்வுகள் மிகமிகத் தாற்காலிகமானதிலிருந்து கொஞ்ச காலம் நீடித்து இருப்பது வரை பலதரப்படும். அடிக்கடி மாறும் . ஆனால் அறிவு என்பது அடிக்கடி மாறும் விசயம் அல்ல. உணர்வுப் போராட்டங்கள் ஆயிரம் நிகழ்ந்தாலும் அதன் மையமான பகுதியாக அறிவு என்பது இருப்பதால் உணர்வைப்போல அறிவு அடிக்கடி மாற்றம் அடைவது இல்லை. ஒட்டு மொத்தமான உணர்வுகளின் போக்கில் மாற்றம் ஏற்படும் அளவு மட்டுமே அறிவு மாற்றம் ஏற்படும்.

சூழ்நிலைகளால் உருவாகும் உணர்வு அந்தச் சுழ்நிலைகளையே பாதிப்பதைப்போல உணர்வுகளின் சலனத்தால் உருவாகும் அறிவு அந்த உணர்வுகளின் மேல் பாதிப்பை ஏற்படுத்தும்.

உணர்வு என்பது சூழ்நிலைகளின்மேல் பாதிப்பை ஏறபடுத்தும். ஆனால் அறிவு எனப்படுவது உணர்வு , சூழ்நிலை இரண்டையும் கட்டுப்படுத்தக்கூடியது. எனவே அறிவை உயர்ந்த இடத்pல் வைத்து மதிக்கிறோம்.

ஆனால் உணர்வும் அறிவும் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. காரணம் சூழ்நிலைகளும் இயல்பான குணமும் பாரம்பரியமும் எல்லோருக்கும ஒரேமாதிரி இருப்பது இல்லை. எனவே சூழ்நிலைகள் உணரப்படுவதும் அதன் மூலம் உருவாகும அறிவும் வித்தியாசப்படுகிறது. இயற்கையின் விதிக்கு, முரண்பாடற்ற வளர்ச்சிக்கு இணக்கமாகவும் இணக்கம் அற்றதுமான இரண்டு விதமான தன்மைகள் வெளிப்படுகின்றன. அவற்றில் தனக்கும் பிறர்க்கும் இயற்கைக்கும் முன்னேற்றத்துக்கும் இணக்கமான உணர்வும் அறிவும் உயர்ந்ததாகவும் இணக்கமற்றவை தாழ்ந்ததாகவும் கருதப்படுகிறது. அதன் அளவுக்கு ஏற்ப தரமும் வித்தியாசப் படுகிறது. 

எனவே உயர்ந்த தரமுள்ள மக்களாய் வாழ விரும்புவோர் உயர் அறிவு பெற்றிருத்தல் வேண்டும். அத்தகைய உயர்ந்த அறிவு பெற அதற்குப் பொருத்தமான உணர்வுகளை அன்றாட வாழ்வில் கடைப் பிடிக்கவேண்டும். எத்தகைய சூழ்நிலையிலும் ஏற்படும் உணர்வுகள் ஆக்கபூர்வமானதாகவும் அறிவுக்கு உரம் ஊட்டுபவையாகவும் இருக்க வேண்டும். எனவே சூழ்நிலைகளால் ஏற்படும் பாதிப்பு எத்தகையதாக இருப்பினும் அது உணர்வாக மாறும்போது சரியான கோணத்தில் ஒழுங்கு படுத்தப்பட்டு அறிவை நோக்கிச் செலுத்தப்பட வேண்டும். அதற்கு ஏற்கனவே உள்ள உணர்வும் அறிவும் உதவ வேண்டும். அத்தகைய உயர்ந்த நெறிமுறைகளை கல்வி மூலமும் அனுபவ அறிவு மூலமும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். 

புலன்களின் மூலமும் கல்வியின் மூலமும் வெளிப்படும் உணர்வுகள், அவற்றின் பிரதிபலிப்புகள், தேவைகள் போன்ற இத்தனையையும் கணக்கில் எடுத்துக்கொண்டு சீர்தூக்கிப் பார்த்து சரியான முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு மூளைக்கே சேரும். அறிவு அதன் இருப்பிடமான தனிமனிதன் மட்டுமல்ல உலகத்தைப் பற்றி மட்டுமல்ல தன்னையே புரிந்து செழுமைப்படுத்திக் கொள்ளும் அற்புதமான பண்பாகும். எனவே புறப் பொருட்களின் மேலும் தனக்குத் தானேயுமாக இயங்கும் பண்பான அறிவு மனித வாழ்வின் ஈடு இணையற்ற அற்புத ஆற்றல் ஆகும்!





No comments:

Post a Comment