ss

Wednesday, April 18, 2012

எனது மொழி ( 9 )

வாழ்வின் கூறுகள் 

நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியிலும் நமது உடலின் ஒருபாகம் செத்துக்கொண்டும் அந்த செத்துப்போன பாகங்கள் எத்தனையோ பொருட்களின் மற்றும் உயிரினங்களின் ஒருபகுதியாக ஒவ்வொரு வினாடியிலும் புதிது புதிதாய்த் தோன்றிக் கொண்டிருப்பதுமான பிறப்பு இறப்புத் தன்மையைக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரே நேரத்தில் முழுமையான செயலிழப்பும் சிதைவும் நேரும்போது மட்டுமே மரணம் என்று சொல்கிறோம். அப்போதுமட்டும் தான் பிறப்பு இறப்புத் தன்மையின் மையமாக இருந்துவந்த உணர்வு மறைகிறது.
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

துன்பத்துக்குப் பின் இன்பம் என்பது உயர்ந்தநிலை. விரும்பும் நிலையும்கூட. இன்பத்துக்குப்பின் துன்பம் என்பது தாழ்ந்த துயரமான நிலை. பெரும்பாலான மக்கள் இரண்டாம் நிலைக்குப் பொருத்தமாகவே உடலாலும் உள்ளத்தாலும் வாழ்கிறார்கள். வாழ்வின் பெரும்பகுதிமட்டுமல்ல இறுதிப்பகுதியும் அதனால் துன்பமாகவே உணரப் படுகிறது. ஆனால் உடலாலும் உள்ளத்தாலும் கடினமான நிலைமைகளுக்குப் பொருத்தமானவர்களாக நம்மை நாமே தொடர்ந்த பயிற்சி மற்றும் கல்வியின் மூலம் தயார்ப்படுத்திக் கொண்டால் வாழ்வின் பெரும்பகுதி மட்டும்அல்ல இறுதிப்பகுதியும் இனிய பகுதியாக இருக்கும்.
ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

வாழ்க்கையின்பங்களை அனுபவிப்பது என்பது எந்த வகையானதாக இருப்பினும் அது அவரவர் வாழ்க்கை வசதிக்கும் வருங்கால நிலைமைக்கும் பொருத்தமாக இருக்கவேண்டும். உதவியாகக் கிடைத்தாலும் கடனாகக் கிடைத்தாலும் வசதிக்கு மீறிய வாய்ப்புக்களை ஒதுக்கித் தள்ளிவிடுவது அனுபவிப்பதைவிட மேலானது. காரணம் அதன் விளைவாய்த் தோன்றும் உணர்வுகள் எளியவாழ்வுக்குப் பொருத்தமாக இருக்காது. துன்பத்தில் முடியும்.

No comments:

Post a Comment