பாரதியைப் பழித்த தமிழர்!
நாங்கள் வருடாவருடம் மகாகவி பாரதியார் பிறந்த மாதத்தில் ஒரு நாள் பாரதிவிழா நிகழ்ச்சி ஒன்றை நடத்துவோம். மாணவர்களுக்கு இடையே பாரதியார் தொடர்பான பாட்டுப்போட்டி, பேச்சுப் போட்டி போன்றவை நடத்திப் பரிசுகள்கூட வழங்குவோம்.
ஒரு வருடம் நாங்கள் அந்த விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்ப் பற்றாளரான ஒரு பேராசியரை அழைத்திருந்தோம்
அவர் தனது பேச்சின்போது பாரதியாரின் படைப்புகளையோ அவருடைய தேசப்பற்று பெண்விடுதலை போன்ற சிறப்புகளையோ நினைக்காமல் அவரை நிந்தித்துப் பேசத் துவங்கினார். எங்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது!
தகுதியற்றவரை அழைத்துவிட்டோம் என்று உணர்ந்து தாமதம் செய்hமல் இடைமறித்து அவரது பேச்சைத் துண்டித்துவிட்டு அவை நாகரிகமற்ற அவரின் செயலைக் கண்டித்து பேசி முடித்தோம்!
அவரைப் போலவே பாரதியாரை அங்கீகரிக்காத தமிழ்ப் பற்றாளர்கள் தமிழ்நாட்டில் கொஞ்சம்போர் இருக்கிறார்கள். பாரதியாரை, அவரது தமிழை, அவரது கவிதைகளை, அவரது முற்போக்கான சிந்தனைகளையும் வீரத்தையும் மதிக்காதவர்கள் எப்படித் தமிழ்ப் பற்றாளர்களாக இருக்க முடியும்?
அத்தகையவர்கள் தாம் எப்படி அவரைப் பழிக்குமளவு தகுதி பெற்றவர்கள் என்று சொல்வார்களா?
அல்லது அவரைவிடத் தகுதிவாய்ந்த யாரையாவது சொல்வார்களா? இவர்கள் எல்லாம் தமிழ்ப்பற்றாளர்கள் என்று சொன்னால் தமிழ் எப்படி வாழும்?
No comments:
Post a Comment