ss

Monday, May 7, 2012

உணவே மருந்து ( 10 )



சிரங்கும் சுகமும்

சிரங்கு பிடித்தவன் கை சும்மா இருக்காது என்பது பழமொழி!

ஆம்! சிரங்கு பிடித்தவருக்கு அந்த இடத்தில் சொரிந்த்து கொண்டிருந்தால்தான் நன்றாக இருக்கும். சொரியும்வரை சுகமாகவும்  இருக்கும்.

அதே சமயம் அதற்கு மருந்து போட்டால் அவ்வளவு சுகமாக இருக்காது! 

ஆனால் சொரியும் வரை சுகமாக இருந்தது கடைசியில் ரணமாகித் துனபத்தைத்தான் தொடர்ந்து கொடுக்கும். 

மருந்து போடும்போது சுகமாக இல்லாவிட்டாலும் அதை குணமாக்கிவிடுவதால் தொடர்ந்து சுகத்தைத் தரும். உண்மையான சுகம் அதுதான்!

அதுபோல நாவிற்கு ருசியாக அது கேட்கும் சமைத்த மற்றும் எண்ணையில் சுட்ட அல்லது பொறித்து எடுத்த எதைக் கொடுத்தாலும் உண்ணும் வரை ருசியாகத்தான் இருக்கும். உண்டு முடிந்தபின் அதன் பின்விளைவுகளால் உடலுக்கு ஏதாவது ஒரு வகையில் துன்பம் கொடுத்துக்கொண்டே இருக்கும்.

ஆனால் இயற்கையாகக் கிடைக்கும் காய் கறிகளோ சமைக்காமல் தயாரிக்கப்படும் இயற்கை உணவுப் பண்டங்களோ பழச் சாறுகளோ மூலிகைச் சாறுகளோ சமைக்கும் உணவுடனும் ஆலைத்தயாரிப்புப் பொருட்களுடனும்  தாற்காலிகச் சுவையில் போட்டிபோட முடியாவிட்டாலும் உண்ட பின்னால் தொடர்ந்து உடல்நலத்துக்கு நன்மைசெய்வதால் அதுதான் உண்மையான சுவையாகும். 

No comments:

Post a Comment