ss

Tuesday, May 8, 2012

விவசாயம் ( 11 )

ஒரு உத்தேசக் கூட்டுப் பண்ணைத் திட்டம்.
===============================

நகர்ப்புறங்களில் வேலையில் இருப்பவர்கள், வர்த்தகம் முதலான சொந்தத் தொழிலில் இருப்பவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இன்னும் பல்வேறு தரப்பிலும் உள்ள வருவாய் நிறைந்த அல்லது குறைந்த பணியில் உள்ளவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு குணம் உண்டு. ஆதாவது தாங்கள் இயற்கையைவிட்டு விலகிப் பண வருவாய் ஒன்றே குறிக்கோளாக வாழ்கிறோம். வாழ்நாளில் ஒரு காலத்திலாவது அழகான ஒரு சிறு தோட்டம் வாங்கி இயற்கைச் சூழலில் வாழவேண்டும் என்பதே அது!


ஆனால் எத்தனை பேருக்கு இது சாத்தியம்? எதனால் சாத்தியமில்லை? முதலில் யோசிப்போமே!ஒரு அழகான கிராமம். அருகில் ஆறும் மலையும் இருக்கும். நகரவாடையோ தொழில்நிறுவனங்கள் வெளியிடும் நச்சுப்பொருட்களோ இல்லாத சுத்தமான சுற்றுச்சூழல். அங்கு ஒரு பண்ணை. அதன் நடுவே ஒரு அழகான பண்ணைவீடு. அங்கு அனைத்துவகையான காய் கனிதரும் மரங்களும் செடி கொடிவகைகளும் பூத்துக் காய்த்துக் குலுங்கி நிற்கின்றன.


அங்கே பண்ணை வீட்டில் அனைத்துவசதிகளும் உள்ளன. விருந்தினர் தங்குவதற்கான அழகான குடில்கள் இருக்கின்றன. விளையாட்டுத் திடல்களும் நீச்சல்குளமும்கூட உள்ளன. அந்தப் பண்ணையைப் பராமரிக்கும் தொழிலாளர்கள் வசிப்பிடங்கள் தனியாக உள்ளன.


பண்ணையின் சொந்தக்காரர்களில் யார் எப்போது வந்தாலும் நிம்மதியாக ஓய்வெடுக்கவும் பொழுதுபோக்கு விளையாட்டுக்களில் ஈடுபடவுமான அத்தனை ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன. அங்கிருந்து வெளியிடங்கள் எங்கு செல்லவேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ள வாகனவசதி தயார் நிலையில் எபபோதும் இருக்கும்.இத்தனை ஏற்பாடுகளுடன் அங்கு முன்னோடி விவசாயமும் சிறப்பாக ஒருபகுதியில் நடந்துகொண்டிருக்கும். நவீன விவசாயத்துக்குத் தேவையான இயந்திர சாதனங்களும் அதை இயக்குவதற்கான ஆட்களும் இருப்பார்கள். பெரிய பால் பண்ணை ஒன்று இருக்கும். பண்ணையின் சொந்தக்காரர்களில் யார் அங்கு இருந்தாலும் இல்லாவிடடாலும் அனைத்து வேலைகளும் சிறப்பாக நடக்க எல்லா ஏற்பாடுகளும் நிரந்தரமாகச் செய்யப்பட்டு சொந்தக்காரர்களில் விவசாயத்தில் நிபுணத்துவம் உள்ள ஒருவர் கண்காணிப்பில் இயங்கிக்கொண்டிருக்கும்.இப்படிப்பட்ட ஒரு சூழலை தனிப்பட்ட ஒருவரால் உருவாக்கி அதை அனுபவிக்க முடியுமா? முடியாது. ஆனால் பலர் சேர்ந்தால் ஒரு பண்ணையை உருவாக்கி லாபகரமாக நடத்துவதோடு வாழ்க்கையை அனுபவித்து வாழலாம் என்பதே இந்தத் திட்டத்தின் உயரியநோக்கமாகும்.குறைந்தது நூறு ஏக்கராவது இருந்தால்தான் எல்லாவசதிகளையும் கொண்ட நவீனப் பண்ணையாக இருக்கும் என்பது எனது கருத்து. தவிர இத்தகைய பண்ணைகளை சோதனைமுறையில் அமைக்கும்போதே அந்தப் பண்ணை கொடுக்கும் வரவை வைத்துத்தான் வாழவேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களைக் கொண்டு செய்வது சரியாக இருக்காது என்று எண்ணுகிறேன். ஆதாவது தங்களிடம் உபரியாக உள்ள துகையை வங்கியில் போடுவதற்குப் பதிலாக இதில் முதலீடு செய்தால் அதன் மதிப்பைக் கூட்டும்போது வங்கியைவிட கூடுதல் ஆதாயம் கிடைக்கும் அதே சமயம் தங்களின் பண்ணைமூலம் இயற்கைச் சூழலில் வாழும் வாழ்வை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்கிற நோக்கத்தில் முதலீடு செய்பவர்களாக இருக்கவேண்டும்.அதுதவிர ஒரு கூட்டமைப்பின் பெயரால் நிலம் வாங்குவது உட்பட அனைத்தையும் செய்யவேண்டும் . அந்தச் சொத்துக்கள் பொதுவில் இருக்கவேண்டும். யார் எவ்வளவு முதலீடு செய்கிறார்களோ அதற்கு ஏற்ற விகிதத்தில் அவரின் சொத்துரிமைப்பங்கு இருக்கும். ஒவ்வொரு வருடமும் பண்ணை மதிப்பிடப்பட்டு அடுத்த ஒரு வருடத்துக்கு யார் விலகவிரும்பினாலும் அந்தப்பண்ணையில் ஏற்கனவே சேர்ந்துள்ளவர்கள் யார் விரும்பினாலும் அவர்களோ அல்லது போதுவாகவோ நிர்ணயித்துள்ள விலைக்கு விற்பவரிடம் இருந்து வாங்கிக்கொள்ளலாம். இல்லாவிட்டால் ஏல முறையில் யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் வெளியாருக்கு அனுமதி இல்லை. அப்படி அனுமதிப்பது என்றாலோ புதிதாக யாரையாவது சேர்ப்பதேன்றாலோ பொதுவாகத்தான் முடிவு செய்யவேண்டும்!ஒவ்வொருவருக்கும் உரிமைமட்டுமே இருக்கும். சொத்து தனித் தனியாக இருக்காது!குடியிருப்புகள்கூட பொதுவில்தான் இருக்கவேண்டும். வசிப்பவர்கள் அதைக் குத்தகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.அனைத்து உரிமைகளும் எல்லோருக்கும் ஒரேமாதிரி இருக்கும். ஆதாயம் மட்டும் அவரவர் பங்குக்கு ஏற்ப இருக்கும்.இன்னும் விரிவான திட்டங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.இதையும் கணக்கில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே!


http://www.drumsoftruth.com/2013/04/52.html

1 comment: