குளியல்
நண்பர்களே! பழக்கத்தின் காரணமாக வென்னீரில் குளிப்பதை பெரும்பாலோர் விரும்புகிறோம். நானும் சிறுவயது முதல் வென்னீரிலேயே குளித்துப் பழகிப்போய்விட்டதாலும் விவசாய வேலையால் உடல் களைத்திருக்கும்போது வென்னீர்க் குளியல் ஒத்தனம் கொடுத்ததைப்போல் சுகமாக இருப்பதாலும் இதுநாள் வரையிலும் விட முடியவில்லை.
இயற்கை வாழ்வியலை விரும்புபவர்கள் குளிர்ந்த நீரில்தான் குளிக்கவேண்டும். வென்னீர்க் குளியல் பழக்கம் ஒரு குறையாகவே இருந்தது. பச்சைத் தண்ணீர் என்றாலே உடல் நடுங்குவதுபோல் இருக்கும். கடைசியாக ஒரு வழி கண்டுபிடித்து அதன்படி இப்போது பச்சைத் தண்ணீரில்தான் குளிக்கிறேன்.
அந்த வழி:
ஒரு பெரிய பாத்திரத்தில் பாதிக்கு பச்சைத் தண்ணீரால் நிரப்பவேண்டும்.
அதில் ஒரே ஒரு லிட்டர் அளவுக்கு வென்னீர் கொண்டு வந்து கலக்கவேண்டும்.
தொட்டுப்பார்த்தால் சூடும் இருக்காது குளிரும் அடிக்காது. அதன்பிறகு அந்தப் பாத்திரத்தில் குளாய் நீரைத் திருப்பிவிட்டுவிடவேண்டும். குளிக்க ஆரம்பிக்கலாம்.
குளிக்கும்போது தண்ணீர் குறையக் குறைய குளிர்ந்த பச்சைத் தண்ணீரால் நிரப்பப்பட்டுக்கொண்டே இருப்பதால் ஒரு கட்டத்தில் பச்சைத் தண்ணீர் மட்டும் பாத்திரத்தில் இருக்கும் ஆனாலும் எந்தக் குளிரும் இருக்காது.
ஒவ்வொரு நாளும் கலக்கும் வெந்நீரைக் குறைத்துக்கொண்டே வந்தால் சில நாட்களில் சுத்தமான பச்சைத் தண்ணீர்க் குளியலுக்கு சிரமம் இல்லாமல் மாறியிருப்போம்!
தேவையான எல்லோரும் உடனே முயற்சி செய்யலாம்!
i am also using this method always..thanks for putting this as a post
ReplyDeleteமுதலில் குளிர்ந்த நீரில் ஏன் குளிக்க வேண்டும்.
ReplyDelete…குளித்தல் என்பது உடலின் வெப்ப நிலையைச் சீராக்குவதற்காக..
…ஆக மிதமான வெப்பநீரில் குளித்தல் தான் நன்று. எந்த வெப்ப இரத்த உயிரியும், நம்மைப் போல் குளிர்ந்த நீரில் காலையில் குளிப்பது இல்லை.
…
நன்றி நண்பர்களே! நமது உடலின் வெப்பத்துக்குப் பொருந்தாமல் சூடாகவோ குளிர்ந்த நீரிலோ குளிப்பது தவறே! நமக்கு எதிர்மறை உணர்வு ஏற்படாத வெப்பநிலை உள்ள நீர்தான் குளியலுக்கு ஏற்றது!
ReplyDeleteசிலர் தேவை இல்லாமல் அதிக வெப்பமான நீரிலும் அதிகக் குளிர்ச்சியான நீரிலும் குளிக்கிறார்கள்! காரணம் பழக்கத்தை மாற்றிக்கொள்ள விரும்புவதில்லை! அது தவறு!
காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பது 5 கிமீட்டர் ஒடுவதற்கு சமம். ஆகவே அதை ஒரு உடற்பயிற்சி போல் செய்வது நல்லது.தினமும் ஒரு நேரம் தோல்பரப்பின் அத்தனை பகுதிகளுக்கும் ரத்த ஓட்டம் வழக்கத்திற்கு மாறாக அதிகப்படுவதால் தோல் மற்றும் இதயம் சீராக அமையும்.
ReplyDeleteசரியாக சொன்னீர்கள்
Deleteஆற்றிலோ அல்லது அருவியல் குளிப்பது தான் சிறந்தது
ReplyDeleteவெந்நீரில் அதுவும் உடல் வெப்பத்திற்கு ஈடான சூட்டில் குளிப்பது மிக உகந்தது
வள்ளல் பெருமான் வெந்நீரில் குளிப்பது தான் சிறந்தது
என சொல்கிறார் ,இடம் கால நிலை இவற்றில் கருத்தில் கொள்ள வேண்டும் .
எல்லா சூழ் நிலைகளை பொருத்தது தான்,
it can not generalized rule
thanks