ss

Tuesday, May 15, 2012

விவசாயம் ( 15 )


புதிய பூதம்!
============

ஒரு புறம் வேதிப்பொருட்களைப் போட்டுப் போட்டு விவசாய நிலங்கள் பாழாகிவிட்டன. விவசாயியும் பாழாகிக்கொண்டு இருக்கிறான். 

அதனால் இயற்கை வேளாண் முறைக்கு மாறவேண்டும் என்று முயன்றுகொண்டு உள்ளோம். 

அதுவே தும்பை விட்டு வாலைப்பிடித்த கதையாக சாத்தியப்பாடு கண்ணில் தென்படவில்லை. இப்போது புதிதாக மேலும் ஒரு பூதம் கிளம்பியுள்ளது!




இந்த நிலையில் நீரைச் சிக்கனப்படுத்த சொட்டுநீர்ப்பாசனமுறை வேகவேகமாக நடைமுறைக்கு வந்துகொண்டிருக்கிறது..

சொட்டுநீர்ப்பாசனத்துக்குப் பயன்படுத்தப்படும் அனைத்துப் பொருட்களும்  உபகரணங்களும் வேதிப்பொருட்களால் ஆனவையே! குழாய்கள் அனைத்தும் பி வி சி மற்றும்  HDPE எனப்படும் குழாய்களே!அனைத்தும் வேதிப் பொருட்களால் செய்யப்படுபவையே!

இந்தப் பொருட்கள் குறிப்பிட்ட காலத்துள் மீண்டும் மீண்டும் மாற்றவேண்டியவை. ஆகையால் . இவற்றை என்றென்றும் நிலத்தில் பயன்படுத்தியே ஆக வேண்டும்.

கொள்ளிக்கட்டையால் முதுகைச் சொரிந்தமாதிரி மீண்டும் மீண்டும் நிலத்தில் வேதிப்பொருட்களையே நிறைத்து வருகிறோம்.

இது சிக்கலை விடுவிப்பதற்குப் பதிலாக மேலும் மேலும் சிக்கலை வளர்ப்பதாகும்!

இந்த வேதிப்பொருள் பூதங்களிடமிருந்து எப்போது தப்பிக்கப் போகிறோம்?

ஒருபுறம் வருங்கால சமுதாயப் பிரச்சினைகளைச் சந்திக்க எதிர்ப்பு சக்தியே இல்லாத செயற்கை மனோபாவம் படைத்த தலைமுறையை உருவாக்கிக் கொண்டுள்ளோம் 

மறுபுறம் தாக்குப்பிடிக்கமுடியாத சிக்கல் களையும் பிரச்சினைகளையும் அனைத்துத் துறையிலும் மலைபோல் வளர்த்து வருகிறோம்.

வருங்கால சமுதாயம் என்ன செய்யும்?

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. இதனை பயன் படுத்தசெய்யும் வேளாண் துறையின் பதில் என்னவாக இருக்குமோ தெரியவில்லை ஐயா ..!!!!!!

    ReplyDelete