குப்பையில் அமிர்தம்
நண்பர்களே! மீந்து போகும் சாதத்தை குறிப்பிட்ட நேரத்துக்குப் பின்னால் தூக்கி எறிவதைத்தான் நிறையப்பேர் வழக்கமாகச் செய்கிறார்கள்.
அதற்குப் பதிலாக சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டால் ஒரு நாளெல்லாம் கெட்டுப்போகாது என்பது மட்டுமல்ல! அதை நன்கு கரைத்து வெங்காயத்தையும் நறுக்கிப் போட்டு சிறிது உப்பையும் சேர்த்துக்கொண்டால் அற்புதமான சுவையான உணவாகிவிடும்.
சிறிது தயிரோ மோரோ சேர்த்துக்கொண்டால் மேலும் சுவை அதிகமாகும்.
சமைப்பதன் மூலம் ஒரு பகுதி சத்துக்களை இழக்கும் அரிசி பழைய சோறாக மாற்றப் படுவதன் மூலம் மீண்டும் புத்துயிர் பெறுகிறது. உண்மையில் அது இயற்கை உணவுக்கு நிகரான உணவாகும்!
மற்ற உணவுகளால் ஏற்படும் தீங்கை இது உடனுக்குடன் ஓரளவு சரி செய்யும்.
குப்பையில் கொட்டப்படும் உணவை அமிர்தமாக்கி உண்ணும் செலவில்லாத முறையை ஏன் எல்லோரும் பின்பற்றக்கூடாது?
No comments:
Post a Comment