ss

Thursday, May 17, 2012

விவசாயம் ( 17 )


விவசாயமும் இயற்கையும் 

விவசாயம் செழிப்புற்றிருந்த காலத்தில் மக்களின் வாழ்க்கைச் செலவுகளில் பெரும்பகுதி உணவுத்தேவைக்காக இருந்தது. ஆதாவது ஒருவருடைய வருவாயில் பெரும்பகுதி உணவுத்தேவைக்காகச் செலவிடப்பட்டது. அதனால் விவசாயி வாழ்ந்தான், விவசாயமும் வாழ்ந்தது.

ஆனால் தற்காலம் வருவாயில் ஒருபகுதிதான் உணவுத்தேவைக்காக செலவிடப்படுகிறது. அதன் காரணமாக விவசாயி வீழ்ந்தான் . விவசாயமும் வீழ்ந்தது.



இப்போது வருவாயில் பெரும்பகுதி உணவுத்தெவைகளுக்காக அல்லாமல் மற்ற தேவைகளுக்காகச் செலவிடப்படுகிறது. இது வேறொரு கடுமையான விளைவுக்கும் காரணமாகிவிட்டதை இதுவரை யாரும் உணரவில்லை!

ஆதாவது உணவுப்போருட்களுக்காகச் செய்யப்படும் செலவுகள் மறைமுகமாக பல வழிகளில்  மீண்டும் நிலத்துக்கே பயன்படுகிறது. அதனால் எந்தத் தீங்கும் நேர்வதில்லை!

ஆனால் உணவல்லாத செலவுகள் ஒவ்வொன்றும் தேவையற்ற குப்பைகளை உருவாக்குவதற்கே பயன்படுகிறது. அது மீண்டும் தான் உருவான மண்ணுக்கு எந்த நன்மையையும் செய்வதில்லை. மாறாக நிலத்தையும் நீரையும் காற்றையும் நஞ்சாக்குவதன் மூலம் சுற்றுச் சூழகுக்குப் பெரும் கேடு விளைவிக்கிறது.

மொத்தத்தில் நாம் வாழும் உலகை வாழத் தகுதியற்றதாக்குகிறது!

இந்த உண்மை உணரப்ப்படுமா?...

No comments:

Post a Comment