பயன் என்ன?
ஒளியைப் பரப்புவது சூரியனின் இயல்பு. அந்த ஒளி எங்கெல்லாம் பாய்கிறது என்ன விளைவை ஏற்படுத்துகிறது என்பதை சூரியன் கட்டுப்படுத்துவது இல்லை.
அதுபோல உயர்ந்த மனம் கொண்டோரின் எண்ணங்களும் நோக்கங்களும் நல்ல விதைகளைப் போன்றவை. அவை அண்டத்திலுள்ள அத்தனைக்குமானவை. அவை சென்று விழும் இடத்தைப்பொறுத்தே பயன் அமைகிறது.
பயனற்றுப் போகும் பல முக்கியமல்ல.
பயனுள்ளவிதத்தில் விழுந்து மீண்டும் முளைத்துத் தன்னைப்போல் ஆயிரமாயிரம் லட்சோப லட்சம் விதைகளை உண்டுபண்ணக்கூடிய அந்த சிலவிதைளே முக்கியம்!
அதுதான் “கடமையைச்செய்! பயனைச் சார்ந்திராதே” என்ற புகழ்பெற்ற வாக்கியம் வலியுறுத்தும் கருத்து!
No comments:
Post a Comment