ss

Saturday, May 5, 2012

எனது மொழி ( 19 )




சுதந்திரம்!

தெருவில் திரிகின்ற ஒரு சொரி நாயைப் பிடித்து வந்து அதற்குத் தனியாக ஒரு மாளிகையை ஒதுக்கி அதற்கு வேண்டிய எல்லாவித உணவு வகைகளையும் உள்ளேயே ஏற்பாடு செய்து வெளியே விடாமல் பூட்டிவிடுகிறோம்.

ஒரு ஆறுமாதம் கழித்து வந்து வெளியே திறந்து விட்டால் அந்த நாய் மீண்டும் அந்த மாளிகைச் சிறையை விரும்பித் திரும்பிவருமா? 


நிச்சயம் வராது. காரணம் அது தெருநாயாக இருந்தாலும் அங்கு அதற்குக் கிடைத்த வசதிகளைவிட அதன் சுதந்திர வாழ்வு அதற்கு முக்கியம் என்பதை அது உணர்ந்திருக்கிறது.

ஆனால் நாம் மட்டும் சுதந்திர நாட்டில் வாழ்வதாகச் சொல்லிக்கொண்டு ஊழல் பேய்களிடமும் ஏமாற்றுப் பேர்வழிகளிடமும் பொய்யர்களிடமும் சட்டமீறலைச் சர்வசாதாரமாகச் செய்யும் கயவர்களிடமும் நமது உண்மையான சுதந்திரத்தை இழந்து குறுகிய வட்டத்துக்குள் அடைபட்டுக் கிடக்கிறோமே அதற்கு என்ன பொருள்?

அந்த சொறிநாய்க்கு இருக்கும் சுதந்திர உணர்வுகூட நமக்கு இல்லை என்பது பொருளா?
ய்க்கு இருக்கும் சுதந்திர உணர்வுகூட நமக்கு இல்லை என்பது பொருளா?

No comments:

Post a Comment