ss

Friday, May 11, 2012

எனது மொழி ( 19 )

தன்மானமும் தன்னகங்காரமும் 

தன்மானம் உள்ள எவரும் தனது தவறுகளைத் துணிவுடன் ஏற்றக்கொள்ளத் தயங்க மாட்டார்கள். 

தனது தவறுகளை மூடிமறைக்க உண்மைக்கு மாறான முயற்சியைச் செய்யவும் மாட்டார்கள். 

ஆனால் தன்னகங்காரம் உடையவர்கள் தமது தவறுகளை ஏற்றக்கொள்ளும் துணிவற்றவர்கள் ஆவர்கள். 

தங்களது தவற்றை மூடிமறைப்பதற்காகவும் பழியைப் பிறர்மேல் போடுவதற்காகவும் எத்தகைய பொய்யையும் கூறத் தயங்க மாட்டார்கள். 

அதேபோலத் தன்மானம் மிக்கவர்கள் உண்மைக்கும் நியாயத்துக்கும் எதிராகத் தாம் நடப்பதையோ பிறரால் எண்ணப்படுவதையோ விரும்பவும் மாட்டார்கள். மாறாக அதை மானக்கேடாக நினைப்பார்கள். 

ஆனால் தன்னகங்காரம் மிக்கவர்கள் தாம் நினைப்பதையே நியாயம் என்று கருதுவதோடு மற்றவர்கள் தங்களைப்பற்றி என்ன நினைத்தாலும் தம்முடைய நிலைதான் சரி என்று சாதிப்பதுதான் தன்மானம் என்று கருதிச் செயல்படுவார்கள்.

தன்மானம் அவசியமான பண்பு.

தன்னகங்காரம் திருத்திக்கொள்ளவேண்டிய பண்பு!

No comments:

Post a Comment