என்ன அநியாயம் இது!
அல்லும் பகலும் உழைத்துவிட்டு ஓய்வெடுக்கக்கூட நேரமில்லாமல் தவிக்கின்ற சகோதரிகள் நினைவுக்கு வருவதில்லை.
காடு கழனிகளில் பகல்முழுக்கப் பாடுபட்டுவிட்டு வீட்டிலும் அதே அளவு உழைத்துவிட்டு யந்திரம்போல் வாழ்கிறார்களே அவர்களெல்லாம் நினைவுக்கு வருவதில்லை!
இப்போதெல்லாம் நிறையப்பேருக்கு பெண்கள் என்றால் பெற்ற தாய் நினைவுக்கு வருவதில்லை!
உடன்பிறந்த சகோதரிகளும் தான் பெற்ற பெண்பிள்ளைகளும் நினைவுக்கு வருவதில்லை!
போற்றத்தக்க வாழ்வு வாழ்கின்ற சாதனைகள் புரிகின்ற பெண்கள் நினைவுக்கு வருவதில்லை!
காடு கழனிகளில் பகல்முழுக்கப் பாடுபட்டுவிட்டு வீட்டிலும் அதே அளவு உழைத்துவிட்டு யந்திரம்போல் வாழ்கிறார்களே அவர்களெல்லாம் நினைவுக்கு வருவதில்லை!
மருத்துவ மனைகளில் அற்பக்காசு சம்பளத்துக்காகக் குடும்பங்களைஎல்லாம் விட்டுவிட்டு எங்கேயோ தங்கி யார்யாருக்கோ ஆண் பெண் என்று பார்க்காமல் சேவை செய்கிறார்களே அவர்கள் நினைவுக்கு வருவதில்லை!
இன்னும் எத்தனை எத்தனையோ வகைகளில் தான் துன்பப்பட்டு பிறர்க்காக வாழும் பெண்மணிகள் நினைவுக்கு வருவதில்லை!
போயும் போயும் சமூகத்தைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கும் சில மின்மினிப்பூச்சிகள் மட்டும்தான் கண்களுக்குத் தெரியுமா?
அவர்கள்தான் சரிபாதி சமுதாயத்தின் பிரதிநிதிகளா?
அவர்கள் மட்டும்தான் பெண்களா? அவர்கள்தான் பெண்களுக்கு முன்மாதிரிகளா? அல்லது அவர்களை மட்டும்தான் பார்ப்பது என்கிற வியாதியா?
அவர்கள் மட்டும்தான் பெண்களா? அவர்கள்தான் பெண்களுக்கு முன்மாதிரிகளா? அல்லது அவர்களை மட்டும்தான் பார்ப்பது என்கிற வியாதியா?
என்ன அநியாயம் இது?
கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ளவேண்டும்!
சரியக சொனீர்கள் ஐயா
ReplyDelete