அணுவும் கூஜாவும்
நண்பர்களே!
எனக்கு அணுவிஞ்ஞானத்தைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் அதுபற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறோம். பொதுவான கட்டுரைகளிலும் பத்திரிகைகளிலும் படிக்கிறோம்.
அதன் மூலம் அறிந்துள்தைக் கொண்டு யோசித்ததில் சில ஐயங்கள் எழுகின்றன. அதில் ஒன்றைச் சொல்கிறேன் அது சரியா அல்லது தவறா என்ற உண்மையான அறிவியல் விபரங்களை அறிவியல் விளக்கத்துடன் சொன்னீர்கள் என்றால் மகிழ்வேன்.
ஆதாவது கதிர் வீச்சுள்ள தனிமங்களின் அணுக்கருவைப் பிளக்கும் போது தொடர்வினை ஏற்பட்டு கற்பனைக்கெட்டாத வேகத்தில் அந்த தொடர்வினை நிகழ்வதால் மிக அதிகமான வெப்பமும் ஆற்றலும் ஏற்படுகிறதென்று கேள்விப்படுகிறோம்.
அதன்காரணமாக அணுசக்தியைப் பயன்படுத்தும் தொழில் துறைகள் மற்ற எந்தத் துறையைக்காட்டிலும் பாதுகாப்புக்குக் கூடுதல் முக்கியத்துவம் தருகின்றன.
அதன்காரணமாக அந்த அணுக்கதிர் வீச்சும் வெப்பமும் வெளியே கசிந்துவிடாமல் இருக்க பல அடுக்குகளாகப் பாதுகாப்பு அமைப்புகள் கட்டமைக்கப்படுகின்றன.
இந்தப்பாதுகாப்புக் கட்டமைப்புகள் எல்லாமே நம்மால் உருவாக்கப்படுபவை. குறிப்பிட்ட கால நிர்ணயத்துள் தங்களின் வலிவை இழப்பவை.
இந்த நிலையில் இந்தப் பாதுகாப்புக் கட்டமைப்புகள்மூலம்தான் அணுக்கழிவுகள்கூடப் பாதுகாக்கப்பட்டு பத்திரப்படுத்தப்படவேண்டும்.
ஆனால் அணுக்கதிர் வீச்சு என்பது மனிதன் உருவாக்கும் கட்டமைப்புகளின் ஆயுள்காலத்தைவிட பலமடங்கு அதிககாலம் நீண்டகாலம் நீடிக்கக்கூடியவை என்று தெரிகிறது
இந்த நிலையில் அணுத்தொழில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டாலும் அந்தக் கழிவுகள் பாதுகாக்கப்படும் பெட்டகங்கள் குறிப்பட்ட காலத்தில் வலுவிழக்கும்போது கதிர் வீச்சு வெளிவராதா?
ஒரு அணுமின்சார நிலையம் தனது ஆயுளை முடித்துக்கொள்ளும்போது அந்த இடத்தை மீண்டும் மனிதப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியுமா?
அல்லது காலம் முடிந்துதுபோன அணுமின் நிலையங்கள் இருக்கும் இடத்திலேயே பழையதை அப்புறப்படுத்திவிட்டு மீண்டும் ஒன்றை உருவாக்கும் தொழில் நுட்பம் இருக்கிறதா?
அல்லது இவையெல்லாம் பல ஆண்டுகளுக்கு ஒன்றும் ஆகாது அதற்குள் நமது காலம் போய்விடும் வருங்கால தலைமுறையினர் அதைப் பார்த்துக் கொள்வார்கள் என்னும் நம்பிக்கையா?
தீர்வை வருங்காலத் தலைமுறையினர் தலையில் போட்டுவிட்டு நாம் வாழநினைப்பது சரியா?
ஒரு ஊறுகாயைக் கூட அதன் காலம் வரை இருக்கக்கூடிய ஒரு கூஜாவில்தான் போட்டுவைக்கிறோம்.
அணுக்கழிவுகளைப் போட்டுவைக்க அத்தகைய கூஜா ஏதாவது இருக்கிறதா?
எனது ஐயங்களுக்கு யாரேனும் தகுந்த பதில் அளித்தால் மிகவும் மகிழ்வேன்!
போச்சுடா.மெத்தப் படித்த அணுவிஞ்ஞானிகளுக்கே விடை தெரியாத கேள்வியக் கேட்டுப்புட்டீங்களே.
ReplyDeleteகடல்லயே இல்லையாம்..!
ReplyDeleteவடிவேல் காமெடி மாதிரிதான்
இதுக்கெல்லாம் ஒரே பதில்தான் இருக்கு
எங்களுக்கு தேவை கமிசன்
அணு உலையாவது, கதிர்வீச்சாவது?
நம்மளாலயும் ஒன்னும் பண்ண முடியாது
எதாவது கேட்க நினைச்சாலோ
இல்லை போராட்டம் கீராட்டம்னு
ஆரம்பிச்சாலோ
இருக்கவே இருக்கு
நக்சல், வெளிநாடு கைக்கூலி எக்சட்ரா எக்சட்ரா ....
நிச்சயமாக அணுக்கழிவுகள் என்பது பல லட்சம் வருடங்களுக்கும் அழிக்க முடியாத ஆபத்து விளைவிக்க கூடியவை..... அருந்ததி ராய் அவர்கள் சொன்னது போல, "பிளாஸ்டிக் கழிவே சரியாக கையாள தெரியாத நம் அரசுகள் அணுக்கழிவுகளை பாதுகாக்கும் என்று நாம் நினைப்பது மடத்தனம்".... சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் படரும் நேரத்தில், ஒருவேளை சீனா இந்தியா மீது போர்த்தொடுக்கும் நிலை வந்தால் அதன் முக்கிய குறி கூடங்குளம் அணு உலைதான்.....பல அணு குண்டுகளின் அழிவை அந்த உலை வெடிப்பு நமக்கு கொடுக்கும்.... மின்சாரம் வேண்டி உயிரை பணயம் வைக்க துணிந்த நம் மக்கள் , பூட்டை விற்று சாவி வாங்க ஆசைப்படுகிறார்கள்.......
ReplyDeleteநன்றி நண்பர்களே!
ReplyDelete