உதவி மனப்பான்மை.
இவ்வுலகில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் அனைவரும் ஒரே மாதிரியான வாழ்க்கை வசதிகளைப் பெற்றவர்களோ ஒரேமாதிரி உடல் மன நலம் பெற்றவர்களோ ஒரேமாதிரி சூழ்நிலைமைகளில் வாழ்பவர்களோ அல்ல. அதேபோல எதிர்ப்படும் இன்பதுன்பங்களும் எல்லோர்க்கும் ஒரேமாதிரி இல்லை.
இந்த நிலையில் ஒருபகுதியினர் இன்புற்றிருத்தலும் மறுபகுதியினர் துன்பத்தில் சிக்கியிருத்தலும் ஒருவருக்கே இன்ப துன்பங்கள் கலந்து வருவதும் இயல்பேயாகும்.
இந்த நிலையில் ஒருபகுதியினர் இன்புற்றிருத்தலும் மறுபகுதியினர் துன்பத்தில் சிக்கியிருத்தலும் ஒருவருக்கே இன்ப துன்பங்கள் கலந்து வருவதும் இயல்பேயாகும்.
இன்பதுன்பங்கள் அனைவருக்கும் பொதுவென்றாலும் பெரும்பாலும் பிறர் துன்பங்களைப் பொருட்படுத்தாது தன் சொந்த நலனை மட்டும் பெரிதென எண்ணி வாழும் போக்கு மிகுந்துள்ளது. அது தன் சொந்தக் குடும்பத்தாருக்கே வஞ்சகம் எண்ணுமளவு கூட முற்றியிருக்கிறது.
அதன் காரணமாகத் தீமைகள் மேலும் மேலும் அதிகமாகின்றன. வாழவேண்டிய நெறிமுறைக்கு மாறான நடைமுறைகள் தொடர்கின்றன. துன்பப்படுவோர்க்கு உதவும் கடமையில் இருந்து வசதி படைத்தோர் தவறுவதினால் அத்துன்பங்கள் அதிகமாகின்றன என்பது மட்டுமல்ல அது நலமுடனிருப்போரையும் பாதிக்கிறது.

பொதுவாக உடலின் எந்தப்பாகம் துன்பப்பட்டாலும் மனம் துன்புறுகிறது. ஆதாவது முழுமனிதனும் வருந்துகிறோம். காலுக்குப் பட்டால் கண்ணில் நீர் வருகிறது. அந்தந்த அவயங்கள் மற்றவற்றுக்கும் சேர்த்து பொதுவாகத்தான் இயங்குகின்றன. உடலின் எந்த ஒரு பகுதியும் அதற்காக மட்டும் இயங்குவதில்லை. பொதுவாகவே இயங்குகிறது. இயற்கையின் நியதி அது.
அதனால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்ற பகுதிகளின் துணையோடு குணமாக்கப்பட்டு மீண்டும் நலமுடன் இயஙகுகின்றன.
அதனால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்ற பகுதிகளின் துணையோடு குணமாக்கப்பட்டு மீண்டும் நலமுடன் இயஙகுகின்றன.
ஆனால் மனிதர்களாகிய நாம் மட்டும் தனிமனிதன் தனக்காக அக்கரைப்படுமளவு தன்னைச் சார்ந்தவர்க்கு தான் வாழும் சமுதாயத்துக்கு ஒரு துன்பம் நேரும்போது கவலையும் அக்கரையம் படத் தவறுகிறோம் .
என்றால் மனிதன் மட்டும் மற்ற உயிரினங்களிலிருந்து மேம்பட்ட நாகரிகம் படைத்தவன் என்று எப்படிச் சொல்லிக்கொள்ள முடியும்? சமுதாயத்தின் ஒரு அங்கமாக இருக்கும் சிலர் துன்பப்பட்டு வேறுசிலர் மட்டும் மகிழ்ந்திருப்பது எப்படி நியாயம்? அது எப்படி தொடர்ந்து சாத்தியம்? அதனால்தான் முரண்பாடுகளும் சச்சரவுகளும் தவறான செயல்களும் வளர்கின்றன.

பிற தனி மனிதன் துன்பப்டும்போது அடுத்த தனிமனிதன் அதற்கு உதவும் பண்பு குறைவாகவே உள்ளது.
ஒரு ஊரில் வசிப்பவர்க்குத் துன்பம் நேரும்போது அடுத்த ஊர்க்காரர்களின் அக்கரை போதுமானதாக இல்லை.
ஒருவட்டாரத்தைச் சேர்ந்தவர்களும் ஒரு மொழி அல்லது இனம் அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களின் போக்கும் அத்தகையதாகவே உள்ளது.
அந்நிய நாட்டுமக்களுக்கு இடர் நேரும்போதும் பெயரளவில் உதவி செய்யப்படுகிறதே தவிர சுயநலநோக்கமற்ற உதவிகள் அந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாகப் போய்ச்சேர்வதில்லை.

இந்தப் பண்பின் காரணமாக உலகமக்கள் அனைவரும் ஒரே உலகில் வாழ்ந்தாலும் ஒத்த மனம் படைத்தவர்களாக இல்லை. மற்றவர்கள் எப்படிவாழ்கிறார்கள் என்பதைவிடத் தாங்கள் எப்படி வாழவேண்டும் என்பதற்கே முன்னுரிமை வழிங்கப்படுகிறது.
அதனால் உதவிசெய்து வாழும் எண்ணத்தை விடப் பிறர்க்கு வஞ்சகம் செய்தாவது தாம் வாழவேண்டும் என்ற எண்ணம் வளர்கிறது.
இந்த எண்ணம் தனிநபர் எண்ணமாக இல்லாமல் உலகளாவிய எண்ணங்களாக விரிவடைந்து நாடுகளிடையே கூட அத்தகைய தனிநபர் எண்ணங்கள்தான் மேலோங்கியுள்ளன.
இந்த எண்ணம் தனிநபர் எண்ணமாக இல்லாமல் உலகளாவிய எண்ணங்களாக விரிவடைந்து நாடுகளிடையே கூட அத்தகைய தனிநபர் எண்ணங்கள்தான் மேலோங்கியுள்ளன.
அதனால் தனிநபர்களுக்கு இடையே நேர்கின்ற முரண்பாடுகளும் பூசல்களும் சச்சரவுகளும் சண்டைகளும் நாடுகளுக்கு இடையேயும் ஏற்படுகின்றன. பிற நாடுகளும் நாட்டு மக்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அடிமைப்படுத்தப் படுகிறர்கள்.
அமைதியாகச் செல்லவேண்டிய மனித வாழ்க்கை அமைதியற்ற வாழ்க்கையாக உணரப்படுகிளது.
அமைதியாகச் செல்லவேண்டிய மனித வாழ்க்கை அமைதியற்ற வாழ்க்கையாக உணரப்படுகிளது.
இதற்குக் காரணம் தன்னனைவிடப் பலம் குறைந்தவர்க்கு உதவும் பண்புக்கு மாறாக அந்தப் பலவீனத்தைப் பயன்படுத்தித் தான் நலம் பெறவேண்டும் என்னும் சுயநல எண்ணங்களே ஆகும்.
எப்படி இதயம் முழு உடம்புக்காகவும் துடிக்கிறதோ எப்படி மூளை முழு உடம்புக்காகவும் சிந்திக்கிறதோ முழு உடம்பிலிருந்தும் வருகின்ற ரத்தத்தையும் பிராணவாயுவைக் கொண்டு நுரையீரல் எப்படி சுத்திகரிக்கும் பணியைச் செய்கின்றதோ எப்படி நமது செயல்கள் ஒவ்வொன்றும் முழுமனிதனையும் பிரதிநிதித்துவப் படுத்துகிறதோ அப்படித்தான் சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும் பொதுவான சமுதாயத்தின் பிரதிநிதியாக விளங்க வேண்டும்.
அதுதான் இயற்கையின் வளர்ச்சி விதிகளுக்கும் மனித சமுதாயத்தின் உயர் தரமான வாழ்க்கை முறைகளுக்கும் இணக்கமாகவும் உதவிகரமாகவும் இருக்கும்.
அதுதான் இயற்கையின் வளர்ச்சி விதிகளுக்கும் மனித சமுதாயத்தின் உயர் தரமான வாழ்க்கை முறைகளுக்கும் இணக்கமாகவும் உதவிகரமாகவும் இருக்கும்.
எனவே ஒவ்வொருவரும் பிற மனிதர்க்கும் உடன்பாடான பிற உயிர்களுக்கும் சுற்றுப்புறச் சூழ்நிலைமைகளைச் சிறப்பாகப் பராமரிப்பதற்கும் உதவும் மனப்பாங்குடன் விளங்க வேண்டும்.
பிறர்க்கு உதவும் குணம் இல்லாதவர்களுக்கு பிறருடைய உதவியை எதிர்பார்க்கும் உரிமையும் இல்லை.
உடலியல், மனவியல், மற்றும் பொருளாதாரத் துன்பங்களுக்கு ஆளாவதும் நிறைந்த சுகபோகங்களைப் பெறுவதும் இயல்பு.
ஆனால் துன்புற்றோர் நலம் பெறுவதன் மூலமும் ஏழ்மையில் வீழ்ந்தோர் முன்னேறுவதன் மூலமும் வலிமை மிக்கோர் கை கொடுப்பதன் மூலமும் சராசரி மட்டத்துக்கு தார்மிக வாழ்வு தகுதி பெறுகிறது. அதுதான் இயற்கையோடு இயைந்த வாழ்க்கைமுறையும் கூடஆகும்.

எனவே சமுதாய நன்மைக்காக மட்டும் அல்ல தனது சொந்த வாழ்க்கையின் நலன்கருதிக்கூட ஒவ்வொருவரும் துன்பப்படும் பிறருக்கு உதவ வேண்டும்.
அது அவரவர் கொண்டிருக்கும் நெருக்கத்துக்கு ஏற்ப அளவில் வேறுபட்டாலும்கூட அது பொதுவான சமூகக் குணமாகும் போது யாரும் விடுபட வாய்ப்பு இல்லை. எனவே உதவி மனப்பான்மை அடிப்படை உயர்நெறிகளுள் ஒன்றாகும்.
அது அவரவர் கொண்டிருக்கும் நெருக்கத்துக்கு ஏற்ப அளவில் வேறுபட்டாலும்கூட அது பொதுவான சமூகக் குணமாகும் போது யாரும் விடுபட வாய்ப்பு இல்லை. எனவே உதவி மனப்பான்மை அடிப்படை உயர்நெறிகளுள் ஒன்றாகும்.
வாழும் மனிதர் ஒவ்வொருவரும் அனைவரையும் மற்ற அனைவரும் ஒவ்வொருவரையும் பற்றி அக்கரையின்றி வாழ்வதைவிட ஒவ்வொருவரும் அத்தனை மக்களைப் பற்றியும் அத்தனை மக்களும் ஒவ்வொருவர் பற்றியும் அக்கரையும் உதவும் பண்பும் கொண்டு வாழ்தலுக்கு இணை வேறு எதுவும் கிடையாது!
No comments:
Post a Comment