உணர்வில் நஞ்சு!
நமது பண்பாடும் வர்த்தகமுறையும் சீரழிந்து பச்சைச் சுயநலமாக மாறிவிட்டது.
ஏதாவது ஒரு ஆதாயமில்லாமல் எதையும் செய்வதில்லை. ஏதாவது ஒரு ஆதாயமிருந்தால் எந்தத்தீங்கையும் விடுவதும் இல்லை என்பது மரபாகிவிட்டது.
ஒரு குறிப்பிட்ட உணவுப் பொருளில் குறிப்பிட்ட ஒரு நஞ்சு நூறு என்கிற ஒரு நிலை வந்தால் ஆளைக்கொன்றுவிடும் என்று இருந்தால் தொண்ணூறு சதம் அந்த நஞ்சைக் கலக்க தயாராக இருக்கிறார்கள். காரணம் அந்த நிலையில் அது உயிரைக் கொல்லாது. பிரச்சினை வராது என்பதே!
கொல்லா விட்டாலும் அது தீங்கு விளைவிக்கும் என்ற உணர்வோ அக்கரையோ பெரும்பாலோருக்கு இல்லை என்பதுதான் கசப்பான உண்மை!
அதனால்தான் வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்ட ந்ச்சுப்பொருட்களைக்கூட இங்கு கடைபரப்பி காசுபண்ண முடிகிறது!
இந்தச் சிக்கலில் இருந்து மக்களை விடுவிப்பது எப்படி என்பதுதான் அக்கரைப்படவேண்டிய விஷயம்.உணர்வில் நஞ்சு!
No comments:
Post a Comment