வெற்றிப் படிகள்
சரியாகச் சிந்திக்காதவர்களால் சரியான முடிவுக்கு வர முடியாது.
சரியாகப் பேசத் தெரியாதவர்களால் தமது கருத்தைப் பிறர் ஏற்றுக்கொள்ளும்படி செய்யமுடியாது.
சரியாகச் செயல்படாதவர்களால் நல்ல பயனை அடைய முடியாது.
எனவே சரியாகச் சிந்திக்க வேண்டும். சரியாகப் பேச வேண்டும். சரியாகச் செயல்படவேண்டும்.
அப்போதுதான் நாம் நல்லோராயினும் நமக்கும் நாட்டுக்கும் பயனுள்ள வாழ்வு வாழமுடியும்.
நல்ல பண்புகளும் நல்ல எண்ணங்களும் மட்டும் குறிக்கோளை அடையப் போதுமானது ஆகாது.
சிந்தனைத்திறனும் சொல்லாற்றலும் செயலூக்கமும்தான் வெற்றியைத் தீர்மானிக்கின்றன.
எனவே நம் எண்ணம், சொல், செயல் மூன்றையும் உயர்ந்ததாக வைத்துக்கொள்வது மட்டும் போதாது.
அவற்றை நாம் எவ்விதம் கையாள்கிறோமோ அதைப்பொருத்தே பயன் அமைகிறது.
No comments:
Post a Comment