நற்பண்பு
ஆறுகளும் அடர்ந்த மேகங்களும் அளவற்ற நன்னீரைக் கொட்டினாலும் கடல்நீர் உப்பாகவே உள்ளது.
காரணம் அது வெப்பத்தால் ஆவியாகும் பொது நல்ல நீரைமட்டும் ஆவியாக்குகிறது. உப்பைத் தன்னிடமே வைத்துக்கொள்கிறது.
அதுபோல் என்னதான் அறிவுரைகள் கற்றாலும் பிறர் சொன்னாலும் பெரும்பாலோர் திருந்தாத மக்களாகவே இருக்கிறார்கள்.
காரணம் சுயநலம் மட்டுமே வாழ்க்கையாகப் புரிந்துகொண்டிருப்பதால் வாழ்க்கைப் போராட்டத்தின்போது நல்ல பண்புகளை மட்டும் விட்டுக் கொடுக்கிறார்கள். தவறானவற்றைத் தங்களிடமே பிடிவாதமாக வைத்துக்கொள்கிறார்கள்!
இந்தப் பண்பு மாறினாலொழிய நம்மை உயர்வாக எண்ணிக் கொள்வதில் அர்த்தமில்லை!
No comments:
Post a Comment