தீண்டாமை
எந்த ஊரில் எந்தக் கோவிலில் எந்தத் திருவிழா நடந்தாலும் அந்த ஊரில் வசிக்கும் அனைத்துத் தரப்பு மக்களும் கூடிப் பேசி அனைவரும் பங்கு பெறும் நிர்வாகிகளைத் தேர்வு செய்து அவர்கள் எடுக்கும் முடிவுப்படிதான் விழா நடக்க வேண்டும்.அவர்கள் தலைமையில்தான் நடக்கவேண்டும் என்று சட்டம் இயற்றி நடைமுறைப் படுத்த வேண்டும்.
சிலர் கோவிலுக்குள் இருந்துகொண்டே நாய்க்கு எலும்புத்துண்டு விட்டெறிவதைப்போல் பிரசாதங்களை வீசி எறிவதும் பாவப்பட்ட பலர் உள்ளே அனுமதிக்கப்படாமல் வெளியில் தூர நின்று கை படாமல் வாங்கிக் கொள்வதுமான அநீதியும் அக்கிரமமும் ஒழிக்கப்படவேண்டும்!
இது எங்கு நடக்கிறதோ அங்கு காவல்துறை மாறுவேடத்தில் சென்று கண்காணித்து சம்பந்தப்பட்டவர்கள்மேல் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்
அரசு இதற்கான உத்தரவை ஏன் பிறப்பிக்கக்கூடாது?
No comments:
Post a Comment