ss

Tuesday, May 15, 2012

அரசியல் ( 2 )

கருத்தோட்டம் (2)

 நண்பர்களே! முதலில் ஒன்றை நாம் கவனிக்கவேண்டும். நமது நாட்டில் நிலவுவது மக்களாட்சி என்று நாம் எண்ணிக்கொண்டிருப்பதே சரியானதல்ல. மக்களாட்சி என்ற பெயரால் எமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை!


மக்களின் பிரதிநிதிகளாக வசதியானவர்கள்மட்டும் வரமுடியும் , தேசபக்தி, நேர்மை தியாக உணர்வு போன்றவையெல்லாம் முக்கியமானவை அல்ல என்ற நிலையை அனுமதிக்கும் தேர்தல் முறையை மக்களாட்சித் தத்துவம் என்பதே மோசடியாகும்.



சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்று சொல்லிக்கொண்டே அந்த சட்டம் சிலருக்குப் பயன்படவும் பலரை நசுக்கவும் பயன்பட அனுமதிக்கும் ஆட்சிமுறை ஜனநாயகம் என்று எப்படி ஏற்றுக்கொள்வது?



தேர்தலில் நிற்கும் சிலரைத் தவிர மற்றவர்களில் பெரும்பாலோர் மக்கள் நலனுக்கு எதிரானவர்களாக இருந்தாலும் அவர்களில் யாரோ ஒருவருக்கு ஒட்டுப்போட்டுவிட்டு அவர்களின் தீயகுணங்களுக்குத் துணைபோனவர்களாக வாழ்வதுதான் மக்களின் ஜனநாயக்கடமை என்றால் அது எப்படிச் சரியாகும்?


வேறு வழி? அதுதானே ஜனநாயகம் என்று கர்ப்பிக்கப்பட்டிருகிறது? நிர்ப்பவனுக்குத்தானே ஒட்டுப்போடமுடியும்? நல்லவர்கள்தான் நிற்க முடியும் என்று ஏதாவது வடிகட்டும் முறை இருக்கிறதா? நீங்கள் அப்பழுக்கற்ற தேசபக்தர். நாட்டுக்காக உழைக்க உண்மையாலுமே நினைக்கிறீர்கள். எல்லாத் தகுதியும் இருக்கிறது. உங்களால் புகழ்பெற்ற ஒரு பொறுக்கியை ஜெயிக்க முடியுமா? முதலில் தேர்தலில் நிற்க தேவையான கோடிகள் உங்களிடம் உள்ளதா?

இப்படி இருக்கும்போது நல்லவர்கள் எப்படி மக்களின் பிரதிநிதிகளாக வந்து சேவை செய்யமுடியும்? நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கிடைக்கு ரெண்டாடு கேட்கத்தான் செய்யும்! அப்படிப்பட்ட நரிகள்தானே பெரும்பாலும் நமது தலைவர்கள்? தேர்தலில் நிற்பவர்களில் யாரும் உங்களுக்கு அறிமுகமோ நம்பிக்கையோ இல்லாதவர்கள் எனும்போது நீங்கள் யாரைத் தேர்ந்தெடுக்க முடியும்?

மக்களுக்கு என்னென்ன உரிமைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது, என்னென்ன மறுக்கப்பட்டிருக்கிறது என்று ஆழ்ந்து சிந்தித்தால் இப்போது நடப்பது ஜனநாயகமா ஏமாற்று வேலையா என்பது தெரியும்!


நடப்பது ஜனநாயகம் என்றால் இந்த அறுபதாண்டுகளுக்கும் மேலாக நாம் ஏன் நல்லதொரு சமூகமாக வாழமுடியவில்லை?

 மக்களாட்சியில் மக்களுக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கும் அடிப்படை ஜனநாயகத்தைப் பற்றியும் மக்களின் கடமைகள் பற்றியும் அவர்களால் தேர்வுசெயயப்படும் அவர்களின் பிரதிநிதிகளின் கடமைகள் பற்றியும் தெரிந்திருக்கவேண்டும். அவ்வாறெல்லாம் இல்லாமல் வாக்குரிமையின் அருமை தெரியாத மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தமது கடமைகள் என்னவென்றே தெரியாத அல்லது கவலைப்படாத நபர்கள் ஆளும் ஆட்சியை மக்களாட்சி என்று கூறுவது ஒன்று அறியாமை, மற்றது மோசடி! 


அறியாமைக்குச் சொந்தக்காரர்கள் பெரும்பாலான மக்கள். மோசடிக்குச் சொந்தக்காரர்கள் பெரும்பாலான அரசியல் தலைவர்களும் அவர்களின் தயவில் வாழும் சுயநலவாதிகளும். 



இந்தநிலமையை ஒழித்துக்கட்டி உண்மையான மக்களாட்சி அமைய வேண்டுமா வேண்டாமா என்பதுதான் முக்கியம்!

மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளைக்கொண்ட ஆட்சிதான் மக்களாட்சி.


ஆனால் இங்கு வேதனை என்னவென்றால் தேர்ந்தெடுப்பது மக்கள்தான் . ஆனால் மக்களுக்காகத் தேர்ந்தேடுக்கப்படுவதில்லை. காரணம் தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டுமே மக்களுக்கு உள்ளது. சரியில்லை என்றால் போடா வெளியே என்று சொல்லும் உரிமை மக்களுக்கு இல்லை.



இந்தநிலையில் தேர்தலில் நிற்பவர்கள் தனது சொத்துக்களில் ஒரு பகுதியை செலவிட்டாவது மக்களுக்கு சேவை செய்ய ஒரு வாய்ப்பு வேண்டுமென்றா தேர்தலில் நிற்கிறார்கள்? நிச்சயம் இல்லை.



அவர்களுக்குத் தெரியும் எவ்வளவு விதைத்தால் பின்னால் எவ்வளவு விளையும் என்று! 



உண்மையான விவசாயம் பொய்க்கலாம். ஆனால் இவர்கள் விவசாயம் பொய்ப்பதே இல்லை. கோடிகோடியாக அறுவடை நடந்துகொண்டே இருக்கிறது.



இதுதான் ஜனநாயகமா?

உண்மையான விவசாயத்தில் வெள்ளத்தாலும் வரட்சியாலும் இழப்பு ஏற்ப்படும். ஆனால் இந்த அரசியல் விவசாயத்தில் பஞ்சம் வந்தால் பஞ்சநிவாரனத்தில் கொள்ளை. வெள்ளம வந்தால் வெள்ளநிவாரனத்தில் கொள்ளை. என அமோக அறுவடை நடந்துகொண்டே உள்ளது . 


இவர்களின் வாழ்வு செழிக்க அவ்வப்போது ஓட்டுப்போடுவதுதான் மக்களின் ஜனநாயகக்கடமையா?


No comments:

Post a Comment