ss

Wednesday, May 23, 2012

தனிநாடு கோரிக்கை நியாயமா?( 3 )


தனிநாடு கோரிக்கை நியாயமா?( 3 )

அரசியல் சட்டத்தில் மாநில அரசுக்கான அதிகாரங்கள், மத்திய அரசுக்கான அதிகாரங்கள், பொதுவான அதிகாரங்கள் என்று மூன்று வகையாக அதிகாரங்கள் பிரிக்கப்பட்டிருக்கிறது அதில் உப்பு சப்பு இல்லாத சில அதிகாரங்கள் மட்டுமே மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநில அரசுகளின் அதிகாரங்களில் மத்திய அரசு தலியிடமுடியும் . ஆனால் மத்திய அரசின் எந்த அதிகாரத்திலும் மாநில அரசுகள் தலையிட முடியாது!

இந்த உதவாக்கரைச் சட்டங்களையும் அதிகாரங்களையும் வைத்துக்கொண்டே தமிழ்நாட்டுமக்களின் நலன்களை விற்று தமிழ்நாட்டையே வாங்கமுடியுமளவு கொள்ளையடிக்க முடிந்தது என்றால் இத்தகைய அரசியல் கட்சிகளை நம்பி அதை ஆதரிக்கும் அறியாத மக்களையும் தனிநாடாக விட்டால் போன வெள்ளைக்காரனை மீண்டும் அழைத்து வந்துவிடமாட்டார்களா?.. (நாட்டை விற்பதற்கு) 



எனது தாய்த்திருநாடு என்று இந்தியாவைச் சொல்லிப் பெருமைப்பட ஒன்றுமில்லை. அதுபோலவே தமிழ்நாட்டை எண்ணிப் பெருமைப்படவும் ஒன்றும் இல்லை. இந்நிலையில் எந்தநிலை பெருமைப்படத்தக்கதாக முதலில் மாறுகிறதோ அதுதான் நியாயமான சிந்தனையும் தேசபக்தியும் மனிதநேயமும் இருப்போர் விரும்பக்கூடிய ஒன்றாக இருக்கும்.

எது முதலில் சாத்தியமோ அதற்காகப் போராடவும் வேண்டும்!



பாராபட்சமற்ற இந்திய ஒருமைப்பாட்டுக்குப் போராடவேண்டும். இல்லாவிட்டால் இந்திய யூனியனுக்குள் தமிழ்நாட்டு மக்களின் ஒற்றுமைக்காகப் போராடவேண்டும்.

இரண்டையும் இணைத்தும் போராடலாம்.

ஆனால் இந்த இரண்டையும் விட்டு மூன்றாவதாக ஒரு வழியை முதலில் துவக்கினால் வெற்றியடையமுடியாது என்பதுமட்டுமல்ல மக்களிடம் நெருங்கக்கூட முடியாது!



இரண்டு, இரண்டிற்கு மேற்பட்ட தேசிய இனங்கள் சேர்ந்து வாழ முடியாது, 
ஒரே தேசிய இனம் நீண்ட நாள் பிரிந்தும் வாழாதுஎன்று ஒரு நண்பர் சொன்னார்.

அப்படியானால் ஐரோப்பாவில் இருந்தும் ஆப்பிரிக்காவில் இருந்தும் ஆக்கிரமிப்பாளர்களாகவும் அடிமைகளாகவும் அமெரிக்க நாடுகளுக்குச் சென்றவர்களும் அங்கேயே வாழ்ந்திருந்த அப்பாவிப் பூர்விகக் குடிகளும் சேர்ந்து அமெரிக்கா, கனடா, மத்திய அமெரிக்கா மற்றும் தென்னமெரிக்க நாடுகளில் இனவேற்றுமைகளை மறந்து பொது இனமாக எப்படி வாழமுடிகிறது?

எல்லா இனங்களையும் சேர்த்து ஒரு பொதுவான தேசிய இனமாக ஆக்கியது எது? அவர்களின் வாழ்நிலைகளும் வாழ்க்கைத் தேவைகளும்தானே?

எண்ணிலடங்காத இனமக்கள் ஒன்று சேர்ந்து நாடுவாரியாக பொதுவான இனமாக மாறமுடியுமென்றால் அதற்குக் காரணங்கள் இருந்தன. ஆனால் ஒரு விளைவு கண்கூடானது. ஆதாவது ஒரு தேசிய இனத்துக்குண்டான அடையாளங்கள் காலத்தால் மாறக்கூடியதுதான் என்பதே அது!

அப்படியிருக்க இரண்டு தேசிய இனமக்கள் சேர்ந்து வாழமுடியாது என்பதும் ஒரேதேசிய இனமக்கள் பிரிந்து வாழமுடியாது என்பதும் தாற்காலிகமாகத்தானே இருக்கமுடியும்? அது எப்படி என்றென்றைக்கும் பொருந்தக்கூடிய ஒரு வாழ்வுமுறையாகும்? அரசுமுறையாகும்?







2 comments:

  1. மிகவும் நல்ல பதிவு. இப்போது இருக்கும் சில சிக்கல்களை கலைந்தது விட்டு ஒன்று பட்ட இந்தியா தான் பலவழிகளில் சிறந்தது அய்யா. நல்ல தலைவர்கள் மத்திய அரசின் குறைகளை எடுத்து கூறி அதை மாற்ற வேண்டுமே தவிர பிரிவினை என்ற வார்த்தையை தவிர்க்க வேண்டும்.

    எல்லோரும் கொஞ்சம் விட்டு கொடுத்து வாழ பழகிக்கொண்டால் கூட்டு குடும்பம் தான் மிகவும் சிறந்தது.

    ReplyDelete
  2. நன்றி நண்பரே!

    ReplyDelete