ss

Wednesday, May 16, 2012

சிறுகதைகள் ( 4 )


திருவரங்கப்பொடி!

(சிறுவயதில் பாட்டி சொல்லக் கேட்டதைத் தழுவியது)

ஒரு கருவாடு விற்கும்  வியாபாரி ஒரு ஊருக்குப் புதிதாகக் கருவாடு விற்கப் போனார்.

அவர் அந்த ஊருக்குப் புதியவர். ஆனதால் எல்லோரைப் பற்றியும் தெரியாது.

தெரியாத் தனமாக அசைவமே உண்ணாத மக்கள்மட்டும் வாழும் வீதியில் நுழைந்து கருவாடு வாங்கலியோ கருவாடு என்று கூவிக் கூவி விற்றிருக்கிறார்.



அங்கு வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு அந்த வியாபாரி தங்கள் தெருவில் கருவாடு விற்றதன் மூலம் தங்கள் இனத்தையே அவமதித்துவிட்டதாகக் கருதி கோபத்தால் கொதித்திப் போயினர்.

உடனே அந்த மனிதரைக் கட்டி இழுத்துவந்து எல்லோருமாக அடித்து உதைத்து விரட்டிவிட்டார்கள்.

அந்த வியாபாரிக்கு மிகுந்த அவமானமாகப் போய்விட்டது. தெரியாமல் செய்த தவறுக்கு இப்படிச் செய்துவிட்டார்களே என்று மிகவும் வேதனைப்பட்டுக்கொண்டே இருந்தார். 

கடைசியில் அவர்களை எப்படியும் பழி வாங்கியே தீருவது என்று முடிவெடுத்தபின் ஆறுதல் அடைந்தார்.

உடனே தன்னுடைய வீட்டில் இருந்த கருவாடு முழுவதையும் நன்கு தூளாக அரைத்து பொடி செய்துகொண்டார். அந்தப் பொடியை நன்கு பொட்டலங்களாகச் செய்து அதன்மேல் திருவரங்கப்பொடி என்று எழுதியும் வைத்தார். 

மறுநாள் குளித்து முடித்து நெற்றியில் நாமம் போட்டுக்கெண்டு சுத்தமான துணிகளைப் போட்டுக்கொண்டு அந்த ஊருக்கு அந்தத் தெருவுக்குப் போனார். அந்த மக்களிடம் தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டு இப்போது தான் பக்திப் பழமாகிவிட்டதாகவும் தீருவரங்கப்பொடி என்ற சமையல் பொடி தயார் செய்து வியாபாரம் செய்வதாகவும் தன்னை ஆதரிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அவர்களும் அவருடைய தோற்றத்தையும் நெற்றியில் திருநாமம் போட்டிருப்பதையம் பார்த்து மெய் சிலிர்த்துப்போய் ஆகட்டும் என்று சொன்னார்கள்.

மறுநாள் தீருவரங்கப்பொடி என்ற பெயரிட்ட கருவாட்டுப்பொடி மூட்டையை அந்த ஊருக்குக் கொண்டு போய் அந்தத் தெருவிலேயே பூராவையும் விற்றுவிட்டார். 

உண்டுபார்த்த அவர்களுக்கு அதன் சுவையும் மணமும் பிடித்துப்போய்விட்டது. அதன் காரணமாக அந்த வியாபாரி மீண்டும் எப்போது வருவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்து நிறைய வாங்கி இருப்பு வைத்துக்கொண்டு சாப்பிடத் துவங்கினர்.

திருவரங்கப்பொடியின் மகிமையைப் பற்றி அவர்களுடைய உறவினர்களுக்கெல்லாம் சொல்லிப் பெருமையாக வாங்கி அனுப்பியும் வைத்தனர். 

அந்த வியாபாரிக்கு படு வியாபரம்! நன்கு சூடுபிடித்து நல்லபடி சம்பாதித்தார்! 

3 comments:

  1. யதார்த்தமான கதை... வெளி தோற்றத்தைதான் நிறைய பேர் நம்புகிறார்கள்...

    ReplyDelete