ss

Saturday, May 19, 2012

அரசியல் ( 5 )

கருத்தோட்டம் (5)

தேர்தலில் ஓட்டுப போடாதவர்களை தண்டிக்கவேண்டும் என்ற குரலும் அவ்வப்போது கேட்கிறது!

ஒரு தொகுதியில் நிற்கும் வேட்பாளர் யாருமே தகுதியற்றவர்கள் அல்லது நம்பிக்கையற்றவர்கள் என்றால் அந்த இடத்தில் அத்தகைய சூழலை அனுமதித்ததால் ஜனநாயகம் நம்பிக்கையிழந்துவிடுகிறது. அதாவது யாருக்கு ஓட்டுப்போட்டு ஜெயித்தாலும் விளைவுகளில் வேறுபாடு இருக்காது என்ற நிலை நிலவினால் ஜனநாயகம் பயனற்றுப் போகிறது. 


அப்போது அத்தகைய ஜனநாயகத்தை உண்மையான ஜனநாயகத்தை நேசிப்பவர்கள் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? அந்த நிலையில் வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் ஒன்றுதான் என ஆகிறது. அபோது வாக்களிப்பது தேவையற்ற ஒன்றாகவும் புறக்கணிக்கவேண்டிய ஒன்றாகவும் ஆகிவிடுகிறது. 



அப்படிப்பட்ட கண்ணோட்டத்தில் புறக்கணிப்பவர்கள் தண்டனை அளிக்கப்படவேண்டிய குற்றவாளிகள் என்றால் அத்தகைய ஏமாற்றும் தேர்தல்களை நடத்தி உண்மையான ஜனநாயகத்தைக் கொலை செய்பவர்களை என்ன செய்யலாம்?

நமது நாட்டில் ஒட்டுப்போடுபவர் எல்லாம் தேசபக்தர்கள் போலவும் போடாதவர் எல்லாம்

தேசபக்தியற்றவர்போலவும் சித்தரிக்கப்படுவது பேஷனாகிவிட்டது. அது ஜனநாயகத்தின் எதிரிகளுக்குக் கிடைத்த மேலும் ஒரு வெற்றி ஆகும்!

ஓட்டு வாங்கிவிட்டு தனது வீட்டைக் கோடிகளால் நிரப்பி அழகுபார்ப்பவனுக்கு தண்டனை கொடுத்தால் அது நியாயம்! அதைவிட்டு அவனுக்கு அல்லது அவனைப்போன்ற வேறு ஒருவருக்கு ஓட்டுப்போட மறுத்து தன்மானம் காப்பவனுக்கு தண்டனை கொடுக்க எண்ணுவது என்ன நியாயம்?

ஒட்டு வாங்கிப்போனவர்கள் மக்களுக்குத் துரோகம் செய்தால் தண்டனைக்குத் தப்ப முடியாது என்பது உறுதிசெயயப்ப்படுமானால் ஓட்டுப்போட தவறுபவர்களுக்கு சவுக்கடி தண்டனைகூட வழங்கலாம்!

49 -ஓ பற்றி பலர் பெரிதாகப் பேசுகிறார்கள். அப்பாவிகள்!

இந்த 49 - O எனபது ஜனநாயகத்துக்கு சர்வரோக நிவாரணி என்ற எண்ணம் நிறையப் பேருக்கு இருக்கும்போல் இருக்கிறது. 

அதைப் பதியாதவர்கள் ரகசியமாக ஓட்டுப் போடலாம், பதிபவர்கள்மட்டும் இன்னான் என்று அங்கிருக்கும் அல்லக்கைகளுக்குகூட எதிரியாகவேண்டும். ஆதாவது பாலைக்குடி என்று தடியை ஒங்கிக்கொண்டு பூனைமுன் பாலை வைப்பதுபோல! இது எந்தவகையில் நியாயம்? 

ஏதோ அப்படிப் பதிபவர்களின் எண்ணிக்கையைப் பார்த்து நாண்டுகொண்டு சாக அவர்கள் தயாராக இருப்பதுபோல!.....

தேர்தல் புறக்கணிப்பு வாக்குகளையும் ரகசிய வாக்கெடுப்பாக நடத்துவதில் என்ன சிக்கல் இருக்கிறது ? முதலில் இது ஒரு மோசடி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அப்படியானால் ஏன் தேர்தலில் வாக்குப்பதிவை ரகசிய வாக்களிப்பாகச் செய்யவேண்டும்?அதையும் அனைவரும் அறியும் வண்ணம் ஒபனாக நடத்தலாமே! அப்படிச் செய்தால் பாராபட்சம் இருக்காதல்லவா?அப்படிச் செய்வதில் என்ன கஷ்டம் இருக்கிறது?

இத்தனை சதவிதம்பேர் தேர்தல் புறக்கணிப்பு வாக்கைச் செலுத்தியிருந்தால் அந்தத் தேர்தல் செல்லாது. அந்தவாக்கையும் ரகசியமாக அளிக்கலாம் என்றாவது அறிவிக்க இந்த தேர்தல் ஏற்ப்பாட்டாளர்கள் அறிவிக்கத் தயாரா?

அழும் குழந்தை கையில் கொடுக்கும் லாலிபாப்புக்கும் இந்த 49 - O விதிக்கும் எந்த வேறுபாடும் கிடையாது!










1 comment:

  1. நல்ல கருத்து, யோசிக்க வேண்டிய விஷயம்.

    ReplyDelete