ss

Saturday, May 19, 2012

அரசியல் ( 6 )

கருத்தோட்டம் (6)


ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்கியமாக வேண்டுமென்றால் அவனின் அங்க அவயங்கள் சரியான நிலையில் இருக்கவேண்டும், இயங்கவேண்டும். இதயம், நுரையீரல், மூளை,நரம்புமண்டலம் முதலிய அனைத்தும் தத்தம் பணியைச் செவ்வனே செய்தால்தான் நாம் நலமுடன் வாழமுடியும். வாழ்வதாக அர்த்தம்!

அதுபோல ஒருநாடு உண்மையான ஜனநாயக நாடாக இருக்க வேண்டுமென்றால் அதன் முக்கிய நிர்வாக அமைப்புகளும் மக்கள் நலன் காக்கும் அமைப்புகளும் அப்பழுக்கற்றதாக இருக்கவேண்டும்.

ஆனால் நமது நாட்டில் நீதித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை. கல்வித்துறை, மருத்துவத்துறை, சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நினைவுக்கு வரக்கூடிய அத்தனை அமைப்புகளும் அதற்குரிய யோக்கியதாம்சங்களுடன் விளங்குகின்றனவா?

அப்படி இல்லையென்றால் நாம் ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் என்று நினைப்பதர்க்குக்கூட வெட்கப்படவேன்டாமா? நான் வெட்கப்படுகிறேன்!



ஒரு வீட்டில் விசேசம் நடக்கிறது என்றால் நாம் சமையலுக்காக ஒருவரை நியமிக்கிறோம். வேறு பணிகளுக்காகவும் பலரை நியமிக்கிறேம். அந்த நபர்கள் செய்யும் வேலைகள் அனைத்தும் அவர்களுக்காகச் செய்யப்படுபவை அல்ல. அந்த விழாவில் கலந்துகொள்ளும் அனைவருக்காகவும செய்ப்படுபவை. ஆதனால் அவர்கள் அவர்களது பணியைச் சரியாகச் செய்யவேண்டும் எனக் கண்காணிக்கிறோம். அதனால் விழாவும் நாம் திட்டமிட்டபடி நடக்கிறது. நாம் நியமிக்கும் நபர்களை நாம் கண்காணிக்கா விட்டால் அவர்களும் நேர்மையானவர்களாக இல்லாவிட்டால் என்னஆகும்?

அதுபோலத்தான் ஜனநாயகமும் மக்கள் பிரதிநிதித்துவமும். வீட்டு;க்கே அவ்வளவு கண்காணிப்பு தேவையென்றால் நாட்டுக்கு வேண்டாமா? மக்களுக்காக மக்களால் தேர்வு செய்யப்படும் நபர்கள் மக்களுக்காக விசுவாசத்துடன் உண்மையாக நடந்துகொள்கிறார்களா எனக் கண்காணிக்க வேண்டியதில்லையா? 

அப்படிக் கண்காணிக்க முடியாது அது சாத்தியப்படாது என்றால் அப்படிக் கண்காணிக்கும் வண்ணம் அந்த முறையை மாற்றியமைக்கவேண்டுமா இல்லையா? அதுதான் மக்கள் சிந்திக்கவேண்டிய முக்கியமான ஒன்றாகும்.



ஒரு மாநிலத்துக்கும் வேறொரு மாநிலத்துக்கும் பிரச்சினை என்றால் அந்தந்த மாநில மக்கள் அந்தந்த மாநிலத்தின் தேவைகளையும் உணர்வுகளையும் முன் வைத்துத் தான் போராடுகிறார்களேயொழிய பொதுவான நியாயத்தின்படி அல்ல.

கோடிக்கணக்கான மக்கள் வாழக்கூடிய ஒரு மாநிலத்தைச் சோர்ந்த ஒருவருக்குக்கூட அடுத்த மாநிலத்தவரின் நியாயம் மனதுக்குப் படாதா? அப்படியானால் மாநிலமக்களுக்கான உறவுகளில் நியாயங்கள் முக்கியத்துவம் பெறுவதில்லை. பிரதேச உணர்வுகளே முக்கியத்துவம் பெறுகின்றன. இதைத் தடுக்க சட்டங்களால் இயலாதென்றால் ஒற்றுமையுணர்வை வளர்க்க சட்டங்களால் இயலாதென்றால் தேசத்தின் கட்டுக்கோப்பும் பாதுகாப்பும் செல்லரித்துப்போகாமல் என்ன செய்யும் பிரிவினை உணர்வுகள் தலைதூக்காமல் என்ன செய்யும்?



ஒரு மொழி பேசும் மக்கள் பாதிக்கப்பட்டால் அந்த மக்கள்தான் வருந்துகிறார்களேதவிர மற்றவர்களிடம் அந்த அளவு ஒத்த உணர்வு வெளிப்படுவதைப் பார்க்கமுடிவதில்லை. ஈழத் தமிழர் பிரச்சினையையே அதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு சின்னஞ் சிறு நாடு நமது ஒற்றுமையின்மையை சாதகமாகக்கொண்டு கடலில் மீன் பிடிப்பவர்களைக்கூட துன்புறுத்திக் கொல்வதைப் பார்க்க முடிகிறது.

இத்தகைய நிலை நிலவுகின்ற ஒரு நாட்டில் நடப்பது ஜனநாயகம் என்றால் அது எப்படி சரியாக இருக்கமுடியும்.


ஜன நாயகத்தின் பயன்கள் ஒரு மாநிலத்துக்கே கிடைக்காதென்றால் அதில் வாழும் தனிமனிதன் எம்மாத்திரம்? இதுதான் ஜனநாயகமா?




No comments:

Post a Comment