ss

Friday, May 4, 2012

உணவே மருந்து ( 7 )




நஞ்சை உண்ண வேண்டுமா?

நண்பர்களே!

இயற்கை உணவு பற்றி நிறைய நண்பர்கள் ஒரு பிரச்சினையை முன்வைக்கிறார்கள்.

ஆதாவது இன்று நஞ்சு கலக்காத விளைபொருட்களே இல்லை என்று ஆனபிறகு அந்தக் காய்கறிகளையோ தானியங்களையோ கிழங்குகளையோ வேகவைக்காமல் பச்சையாக உண்பது எப்படி என்பதே அது.

ஒன்றைமட்டும் நினைவில் வையுங்கள் வேதியியல் பொருட்களால் ஆன பூச்சிக்கொல்லிகள் கொதிக்கவைப்பதால் செத்துப்போகும் நுண்ணுயிர்கள் அல்ல. 

உயர் வெப்பநிலைகளில் பல்வேறு வேதிப்பொருட்களைச் சேர்த்து உருவாக்கப்படும் நஞ்சு ஆகும். 


நாம் செய்யக் கூடியதெல்லாம் இயன்றவரை நஞ்சு அதிகம் பயன்படுத்தத் தேவையில்லாத விளைபொருட்களுக்கு முன்னுரிமை கொடுப்பதும் நாம் பச்சையாக உண்ணும் முன்பு அவற்றைச் சுத்தமாகக் கழுவி உண்பதும் நாட்பட வைத்திருந்து கெட்டுப் போகாமல் புதிதாக சுத்தமாக வாங்கிப் பயன்படுத்துவதுமே ஆகும்.

நஞ்சு பயன்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களைச் சமைத்துச் சாப்பிட்டாலும் சமைக்காமல் சாப்பிட்டாலும் நஞ்சைப் பொருத்தவரை இரண்டும் ஒன்றுதான்.

ஆனால் சமைக்கும்போது நஞ்சு உடலில் சேர்கிறது மட்டுமல்ல அந்தப் பொருட்களில் உள்ள சத்துக்களும் சிதைக்கப்பட்டு வீணாக்கப் படுகிறது. சமைப்பதால் மேலும் கொஞ்சம் நச்சுத் தன்மை கூடுதலாக்கப் படுகிறது.

அதே சமைக்கப்பட்ட உணவுப் பண்டங்களில் இயற்கையாக உண்ணக்கூடியதை இயற்கை உணவாக உண்டோமென்றால் அந்தப்n பாருட்களில் உள்ள சத்துக்கள் முழுமையாகக் கிடைப்பதோடு அதில் அடங்கியுள்ள மருத்துவக் குணத்தையும் முழுமையாகப் பெறுகிறோம். அந்த மருத்துவக் குணம் அதில் அடங்கியுள்ள நச்சுத் தன்மையை எதிர்த்துப் போராட உடலுக்குக் கூடுதலான சக்தியையும் கொடுக்கிறது.

அவ்வளவுஏன், எந்தப் பழங்களை வேகவைத்து உண்கிறோம்? எந்தப் பழச்சாறுகளை கொதிக்கவைத்து அருந்துகிறோம்? அவை எல்லாம் நச்சுப் பயன்பாடு இல்லாமலா விளைந்து வருகின்றன?

எனவே இயற்கை உணவுக்கு எதிரான ஒரு கருத்தாக பூச்சிக்கொல்லிப் பயன்பாட்டைச் சொல்வது என்பது இயற்கை உணவைத் தவிர்ப்பதற்கும் சமையல் உணவைக் குறைத்துக்கொள்ள முடியாத பலவீனத்தை மறைப்பதற்றகும் சொல்லப்படுமம் ஒரு சாக்காகத்தான் கருத முடியுமே தவிர அதில் எள்ளளவும் உண்மை இல்லை!

பூச்சிக்கொல்லிப் பயன்பாட்டை எதிர்க்கும் அதே வேளை அதற்காக இயற்கை உணவு எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை!

No comments:

Post a Comment