ss

Saturday, May 19, 2012

அரசியல் ( 8 )

கருத்தோட்டம் (8)


நல்லவர்க்களும்தீய எண்ணம கொண்டவர்களும் நிறைந்ததுதான் நமது சமூகம். அதில் தீயநோக்கம் கொண்டவர்களுக்குக் கவலையில்லை. சமூக அக்கறையும் இல்லை. அப்பாவி மக்களோ ராமன் ஆண்டால் என்ன ராவனான் ஆண்டால் என்ன தமக்கு ஏதாவது நல்லது நடந்தால் சரி என்று இருப்பவர்கள். 


இப்படியிருக்கையில் சமூக நலனில் அக்கறைகொண்ட நாளைய சமுதாயம் வளம்பெறவேண்டும் என்ற அக்கறைகொண்ட அதற்காக தமது நலனையும்கூட இயன்ற அளவு விட்டுக்கொடுக்கும் தியாக மனம் கொண்ட நல்லோருக்குத்தான் சமுதாய நலன்காக்கவேண்டிய சுமையும் தவறுகளுக்கு எதிராக மக்களின் சக்தியைத் திரட்டவேண்டிய கடமையும் இருக்கிறது. 


நண்பர்களே! மக்கள் குடிமக்களாக மட்டும் இருக்கும் வரை அவர்களின் தகுதிபற்றி அதிகம் கவலைப்பட அவசரமில்லை. ஆனால் வாக்காளர்களாகும்போது அவர்களின் தகுதி பற்றிக் கவலைப்பட வேண்டியதா யிருக்கிறது.


மனிதராய்ப்பிறந்த எல்லோருமே வாழ்வதற்காக ஏதாவது தொழில் செய்து பிழைத்தாக வேண்டும். அப்போது எந்த ஒரு வேலைக்கும் அதற்கான தகுதிகள் நிச்சயம் வேண்டும். இல்லாவிட்டால் வேலை செய்து பிழைக்க முடியாது.


இப்படி இருக்கும்போது நமது விதியைத் தீர்மானிக்கும் தேர்தல்களில் பங்கேற்று வாக்களிக்கமட்டும் எந்தத் தகுதியும் தேவையில்லை குறிப்பிட்ட வயதாகியிருந்தால் மட்டும் போதும் என்றிருப்பது சரியா?


சரியல்ல என்றே எண்ணுகிறேன். அதற்கும் தகுதி வரையறுக்கப்பட்டால் தேர்தல்களின் தரம் உயரும் என்று எண்ணுகிறேன்.

தேர்தல்களில் வாக்களிக்க குறைந்த பட்சத் தகுதியாக வாக்காளர் அனைவரும் ஏதாவது ஒரு மொழியில் கையெழுத்துப் போடத் தெரிந்தவiராக இருக்கவேண்டும் என்பதை வாக்களிக்கும் தகுதிக்கு முன் நிபந்தனை ஆக்கவேண்டும்.


நான் கையெழுதத்துப் போடத் தெரிய வேண்டும் என்பதை வாக்காளர்களின் அடிப்படைத் தகுதியாக்கினால் நல்லது என்றுதான் சொன்னேன். கல்வியறிவைப்பற்றிப் பேசவில்லை.


படிக்காத மேதைகள் இருக்கிறார்கள் என்பதற்காக படித்தவர்கள் நிறையத் தவறுகள் செய்கிறார்கள் என்பதற்காக கல்வியறிவை உதாசீனம் செய்யமுடியாது.


படித்தவர்களால் ஏமாற்றப்படாமல் இருப்பதற்காக வாக்காளர்களின் தரம் உயரவேண்டும் என்பதுதான் அதன் நோக்கமே தவிர தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் கட்டாயம் கல்வியாளர்களாக இருக்கவேண்டும் என்பது இல்லை.


எதற்காக இப்படிப்பட்ட நிபந்தனையை முன்வைத்தேனென்றால் குறைந்தபட்சம் கையெழுத்துப்போடவாவது மக்கள் அறிந்திருக்கவேண்டும் என்பதுதான். பள்ளிக்கூடமே போகாதவர்களாக இருந்தாலும் கையெழுத்துப்போடக் கூடக் கற்றுக்கொள்ளும் முயற்சி இல்லாதவர்கள் என்ன ஜனநாயகத்தைப் பற்றிப் பெரிதாகத் தெரிந்திருக்கவும் அக்கரைப்படவும் வாய்ப்பிருக்கும்? அவர்களை ஏமாற்றுவதுதானே மிக எளிதாக இருக்கிறது?


தவிர ஒவ்வொருவரும் கையெழுத்துப் போடுபவராக இருந்தால் வாக்காளர் அடையாள அட்டை போன்ற தொடர்ந்து ஆயிரக்கணக்கான கோடிகள் செலவுபிடிக்கும் செலவுகளைத் தவிர்ப்பதோடு கள்ள ஓட்டுப்போடுவதைத் தடுக்கவும் பயன்படுமல்லவா?

எப்படி யார் வோட்டுப் போட்டாலும் போடாவிட்டாலும் போட்டவர்களின் ஒட்டு அனைவருக்கும் போதுவாகிறதோ அதேபோல கையெழுத்துப் போடத் தெரிந்தவர்கள் மட்டும் போடும் ஒட்டு என்பது அனைவருக்கும் போதுவானதாகக் கருதப்படவேண்டும்.

அப்போதுதான் மக்களின் தரம் உயர்வதுமட்டுமல்லாமல் ஜனநாயகத்தைப் பற்றிய உண்மையான உணர்வு மக்கள் மத்தியில் ஏற்படும்! 

அனைவரும் கல்வியாளர்களாக மாற இது வேகமாக உதவும்.


No comments:

Post a Comment