ss

Saturday, May 5, 2012

உணவே மருந்து ( 9 )



மூன்று தேவியர் 


நமக்கு வேண்டிய எல்லாச் செல்வங்களையும் வழங்கும் கடவுளை ஸ்ரீதேவி என்றும் கேடுகளை உண்டுபண்ணும் தேவதைகளை மூதேவிகள் என்றும் கதை சொல்வார்கள்.

அதனால் ஸ்ரீதேவியை வரவேண்டுமென்றும் மூதேவியை விட்டு ஒதுங்கவேண்டும் என்றும் வரம் கேட்கிறார்கள்.

உண்மையில் அத்தகைய இரண்டுவகை நமது உணவுப் பழக்கத்தில்தான் உள்ளன.

இதில் ஸ்ரீதேவியாக இருந்து நமது உடல் நலத்துக்கு வேண்டிய அனைத்து நன்மைகளையும் தரக்கூடியது இயற்கை உணவுகளான எல்லாமும் ஆகும்.

இதில் மூதேவிகளாக இருந்து நமது உடல் நலனுக்கு எந்த அளவு மூடியுமோ அந்த அளவு தீங்கு செய்யக்கூடிய தேவதைகள் மூன்று. அவை சர்க்கரை, எண்ணெய், உப்பு இவை மூன்றும் ஆகும்.

அதனால் நாம் நலமாக வாழ விரும்பினால் இந்த மூன்று மூதேவியரையும் இயன்றவரை விலக்கிவைத்து ஸ்ரீதேவியாகிய இயற்கை உணவை விரும்பி வரவேற்க வேண்டும்.

2 comments: