ss

Tuesday, May 15, 2012

அரசியல் ( 3 )

கருத்தோட்டம் (3)


சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை நினைத்துப் பாருங்கள்! சிறுவன் ஒருவனை குருவி சுடுவதுபோல் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். அதைத் தட்டிக்கேட்க குற்றவாளியைப் பிடிக்க மாநில அரசாங்கமே தாடியை நீவிக் கெஞ்ச வேண்டிய நிலை. மக்களுக்கான அரசுகளாக இருந்தால் இந்தமாதிரி சம்பவங்கள் எப்படி நடக்க முடியும்? பிள்ளைப் பூச்சிகளைப் போல் வாழ்வதுதான் மக்களாட்சியில் மனித வாழ்வா?


சட்டங்கள் இதையெல்லாம் அனுமதிக்கும் என்றால் அத்தகைய சட்டங்களை இயற்றுபவர்களை மக்களின் காவலர்கள் என்று சொல்லலாமா?


குப்பனும் சுப்பனும் மாறி மாறி ஆளலாம். மாறி மாறி உதைப்பதைப்போல. ஆனால் உதைப்பவர்கள் அவர்கள் என்பதும் உதைபடுபவர்கள் மக்கள் என்பதும் மாறாத விதியாகும்.

குப்பனும் சுப்பனும் மட்டுமல்ல இன்னும் பலர் மாறினாலும் இந்தப் பொது விதியில் மாற்றம் கொண்டுவர யாரும் விரும்ப மாட்டார்கள். காரணம் கொள்ளிக்கட்டையால் தலையைச் சொரிய அவர்கள் ஒன்றும் பைத்தியக்காரர்கள் அல்ல !


ஒன்றைமாட்டும் நம் நினைவில்கொள்ளவேண்டும். மற்றவர்க்குப் பயன்படுகிறதோ இல்லையோ இதில் பங்கேற்ப்போருக்கும் படிப்போர்க்கும் நிச்சயம் மனதில் ஒரு சிறிதாவது மாற்றத்தை ஏற்ப்படுத்தும். 


ஒரு சிறு நெருப்பால் பெரும் காட்டுத் தீயை உருவாக்கமுடியும் எனபது முதுமொழி. அப்படிப்பட்ட ஒரு காட்டுத் தீ ஏன் இங்கு உருவாகக்கூடாது?



நம்பிக்கைதான் வாழ்விற்கு அடிப்படை. ஆனால் நாம் எதை யாரை நம்புகிறோம் என்பதுதான் கேள்வி!


முகமறியா யோக்கியதாம்சம் அறியா நபர்களுக்கு வாக்களித்துவிட்டு சந்தையில் வித்த ஆடு போக தொச்ச ஆடு விழித்தது போல் விழித்துக்கொண்டு இருக்காமல் நம்மால் தேர்ந்தேடுக்கப்படுபவன் நாம் அறிந்தவனாக இருக்கவேண்டும் நமது பிடிக்குள் இருக்கவேண்டும் சரியில்லையென்றால் நாயடி பேயடி அடித்து விரட்ட எட்டும்தூரத்தில் இருக்கவேண்டும் என நினைக்கிறோம் பாருங்கள் அதுதான் நமது உரிமைகளைக் காக்க எண்ணும் திசையில் முதல்படி!


நமது நாட்டில் மக்கள் தொழில் அடிப்படையில்மட்டும் பிரிந்து இல்லை. பல்வேறு சாதிகளாலும் மதங்களாலும் மொழிகளாலும் எல்லைகளாலும் தீண்டாமையினாலும் எற்றத்தாழ்வுகளாலும் அரசியல் கட்சிகளாலும் பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள். 


ஆகவே நாம் எந்தமுடிவுக்கு அல்லது வரையருப்புக்கு வந்தாலும் அது அனைத்துமக்களுக்கும் பொருந்தக்கூடியதாக இருக்க வேண்டும். (இன்னுமொருமுறை சொல்கிறேன் பொருந்தக்கூடியதாக. ) ஏன் விரும்பக்கூடியதாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லையென்றால் பெரும்பாலானவர் ஆடுகளாகவும் சிருபகுதியினர் நரிகளாகவும் வாழும் எந்த ஒரு நாட்டிலும் அனைவரும் விரும்பும் ஒரு முடிவு எடுக்கமுடியாது.


இப்போதுள்ள ஏற்பாடுகளால் ஒருவரைத் தேர்ந்தெடுக்க மட்டுமே முடியும் . அவரை மக்கள் தம் பிடிக்குள் வைத்துக்கொள்ள முடியாது . மட்டையன் போனால் கட்டையன் வருவான்! நுங்கு தின்றவன் போயிட்டான், நோன்டித் தின்றவன் மாட்டிக்கிட்டான் என்பதைப் போல் ஒருவன்மேலுள்ள கோபத்தை தமது வாக்கின்மூலம் அடுத்தவன்மேல் காட்டலாம்!


No comments:

Post a Comment