ss

Thursday, May 17, 2012

யோகக் கலை ( 2 )


இதயம் - நுரையீரல் கூட்டுப்பயிற்சி

நுரையீரலுக்கும் இதயத்துக்கும் ஒரே நேரத்தில் ஒரு எளிய முறையில் பயிற்சி அளிக்கலாம்.

நுரையீரலுக்குப் பயிற்சி அளிப்பதால் இதயத்திலிருந்து வரும் அசுத்த ரத்தத்தைச் சுத்திகரிக்கத் தேவையான ஆக்ஸிஜனை உள்வாங்கும் திறனை அதிகரிக்கலாம். அது நுரையீரல் சம்பத்தப்பட்டது 

ஆனால் நுரையீரலில் இருந்து வரும் நல்ல ரத்தத்தை உடல் முழவதும் எடுத்துச்செல்லவும் உடல் முழுவதுமிருந்து தனக்கு வந்து சேரும் அசுத்த ரத்தத்தை சுத்திகரிப்புப் பணிக்காக நுரையீரலுக்குக் கொண்டு சேர்க்கவுமாக இருவழிகளிலும் இதயம் செயல்படவேண்டும். துடிப்பின் மூலம் அழுத்தும் எந்திரமான இதயம் வாழ்நாள் முழுவதும் ஓயாமல் செயல்படவேண்டிய இயந்திரமாகும். அது தனது பணியைத் திறம்படச் செய்யவேண்டுமானால் அதன் கட்டமைப்பும் துடிப்புத் திறனும் தேவைக்கு இணையாக இருக்கவேண்டும்.

அவ்வப்போது திடீரெனத் தேவைப்படும் ரத்த ஓட்டத்துக்கு ஈடுகொடுக்கும் திறன் அதற்கு இருக்கவேண்டும். அதிலிருந்து உடல் முழுவதும் வெளிச்செல்லும் மற்றும் உடல் முழுவதும் இருந்து தன்னிடம் வரும் ரத்தக்குழாய்கள் வேகமான ரத்த ஓட்டத்துக்கு ஏற்றவையாக இருக்கவேண்டும். 

சாதாரணமான வாழ்வு வாழ்ந்துகொண்டு உடலுக்கு வேலை கொடுக்காமல் இருந்தோமென்றால் உடலுக்குச் சுகமாகத்தான் இருக்கும். அiதைத்தான் சோம்பேரித்தனம் என்றும் கூறுவோம். அப்படிச் சோம்பேரிகளாக இல்லாதவர்கள்கூட ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு நாள் முழுவதும் வேலை செய்வதும் பின் ஓய்வும் தூக்கமுமாகக் காலத்தைக் கழித்தால் உடலைப் பொருத்தவரை அது சோம்பலுணர்வைத்தான் கொடுக்கிறது.

அப்படிப்பட்ட உடல் நோகாத வாழ்வு வாழும்போது நுரையீரலுக்கோ இதயத்துக்கோ அதிகம் வேலை இருப்பது இல்லை. அதனால் கூடுதல் வேலைக்கு அவை தயாராக இருப்பதும் இல்லை. அதனால் சிலநேரங்களில் தேவைப்படும் வேகமான இயக்கத்துக்குக்கூட அவை தாக்குப்பிடிக்கமுடியாமல் மூச்சுத் திணறுவதையும் இதயம் வேகமாகத் துடிப்பதையும் பார்க்கிறோம்.

மாடிப்படியேறுவதற்கும் பேருந்துக்காக சில அடிதூரம் ஓடுவதற்குக்கூட அத்தகையவர்களால் முடிவது இல்லை. காரணம் அப்போது இதயம் வேகமாக இயங்கவேண்டும் நிறைய ரத்தத்தை அழுத்த வேண்டும் நுரையீரல் அதற்கு ஈடாக ஆக்ஸிஜனை உள்ளிளுத்து ரத்த சுத்திகரிப்பு செய்யவேண்டும். இதுவெல்லாம் அவற்றுக்கு சக்திக்கு மீறிய கூடுதல் வேலைகளாக மாறிப் போகிறது.

இதன் காரணமாக வேலை எதுவும் செய்hமல் அவற்றுக்கு கூடுதல் வேலை கொடுக்காமல் இருந்தால் கூட கூடுதல் வேலை தானாக உருவாகிவிடும். அதுவும் இருவேறு வழிகளில் நெருக்கடி வரும்.

முதலாவது வேலையின்மை பயிற்சியின்மை காரணமாக உடல் பருமன் அதிகரித்து அந்தப்பருமனுக்குத் தக்கபடி இந்த இரண்டும் இயங்கவேண்டும்.

இரண்டாவது ரத்தக்குழாய்களுக்குப் போதுமான வேலையில்லாததன் காரணமாக அவற்றுள் கொழுப்புப்படிந்து அதன் இருக்கவேண்டிய விட்டம் குறைந்திருக்கும். 

இவற்றின் காரணமாக பெரிய அளவு சிரத்தை எடுத்துக் கொள்ளாவிட்டாலும் நாளடைவில் சாதாரண முறையில் உயிர் வாழ்வதே கடினம் என்றாகி மருத்துவம் மருந்து கட்டுப்பாடு என்று வாழ்வே நரகமாகிவிடும்.

ஆக இதயம், நுரையீரல், கூடுதல் எடை போன்ற அனைத்துக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி கொடுக்கப்போகிறோம்.

இதற்கு நடைப் பயிற்சியையும் மெதுவோட்டத்தையும் வித்தியாசமான முறையில் பயன்படுத்தப் போகிறோம்.

நடைப்பயிற்சிக்கான உடைகளையும் காலணிகளையும் அணிந்துகொண்டு தயாராக வேண்டும்.

முதலில் நடையையும் விடும் மூச்சையும் ஒருங்கிணைக்கவேண்டும்.

துவக்கத்தில் விடும் மூச்சு ஒவ்வொன்றுக்கும் மூச்சை வெளிவிடும்போது இரண்டடி உள்ளிளுக்கும்போது இரண்டடி என்ற விகிதத்தில் ஒரு மூச்சுக்கு நாலடிவீதம் நடக்கவேண்டும்.

எடுத்த உடனே நீண்ட அடியாக எடுத்து வைக்காமல் அளவான அடி எடுத்து வைக்கவேண்டும். மூச்சு இரைக்காமல் எந்த அளவு அடியின் தூரத்தை அதிகமாகச் செய்ய முடியுமோ அந்த அளவு நடக்க நடக்க அதிகரித்துக்கொள்ள வேண்டும். 

ஆக துவக்கத்தில் நீளம் குறைந்த அடியில் துவங்கி போகப்போக நீளத்தை அதிகரித்து;ககொண்டே போகவேண்டும் ஆனால் ஒரு மூச்சுக்கு நான்கடி என்பது மட்டும் மாறக்கூடாது.

இந்தப்படிக்கு ஒரு மூச்சுக்கு நான்கடி வீதம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாக நடக்க வேண்டும் ஆனால் எந்தக்காரணம் கொண்டும் மூச்சு இரைக்கக்கூடாது. 

இப்படிச் சிலநாள் நடந்ததும் எவ்வளவு வேகமாக எவ்வளவு நீளமான அடிவைத்து நடந்தாலும் மூச்சு இரைக்காது என்ற ஒரு நிலை ஏற்பட்டால் நல்ல முன்னேற்றம் என்பது பொருள்.

அதன் பின்பு அடுத்த கட்டத்துக்குப் போகவேண்டும்.

ஆதாவது அதைவிடச் சற்று கடினமான பயிற்சிக்குத் தயாராகவேண்டும்.

ஆதாவது ஒரு மூச்சுக்கு இரண்டும் இரண்டும் நான்கடிகளாக இருந்ததை மூன்றும் மூன்றும் ஆறு என்று உயர்த்த வேண்டும்.

ஆனால் எடுத்தவுடன் ஒரு மூச்சுக்கு ஆறு அடிகள் என்பதை நீளமானதாகவும் வேகமானதாகவும் இல்லாமல் நீளத்தையம் வேகத்தையும் எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்குக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

அப்போது கடினமாக இருக்காது. அந்த அளவிலும் சில நாட்கள் நடக்க நடக்க நீளத்தையும் வேகத்தையும் அதிகப்படுத்திக்கொண்டே போகலாம். எவ்வளவு நீளமான அடி எடுத்துவைத்தாலும் எவ்வளவு வேகமாக நடந்தாலும் மூச்சு இரைக்கவில்லை என்ற நிலையை  அடையும் வரை இப்படியே பயிற்சி செய்யலாம்.

அதன் பின் அடுத்த நிலைக்குப் போகவேண்டும் என்று விரும்பினால் நமது பயிற்சி அதற்கு நம்மைத் தயார்ப்பபடுத்தி இருந்தால் நாம் அடுத்த கட்டத்துக்கு முன்னேறலாம்.

அடுத்த கட்டம் நான்கு அடிகள். நான்கு அல்லது ஐந்து அடிகளை எட்டிவிட்டால் நமது பயிற்சி மகத்தானதாக இருக்கும்.

எத்தனை அடிகள் கொண்ட பயிற்சியைச் செய்தாலும் துவக்கத்தில் சில நிமிடங்கள் குறைந்த அடிகளில் துவங்கியே செய்ய வேண்டும். பத்து அல்லது பதினைந்து நிமிடங்களில் உச்சகட்ட வேகத்துக்குச் செல்லலாம்.

தினமும் நடக்கும் நேரத்தை அதிகரித்துக்கொண்டே போய் குறைந்த பட்சம் தினம் ஒரு மணிநேரம் என்று வைத்துக்கொள்ளலாம்.

அதேபோல காலை நேரம் அவசியமாகவும் முடிந்தால் மாலையிலும் செய்யலாம்.

இதேநேரத்தில் நல்ல உணவுப்பழக்கத்தைக் கடைப்பிடிக்கவும் இதைப்பயிற்சிக்காலமாக எடுத்துக்கொள்ளலாம். இயன்றவரை இயற்கை உணவு எடுத்துக் கொள்வதே நல்லது. பழக்கத்தை மாற்றிக் கொள்ள முடியாத நிலையில் ஆவியில் வேகவைத்த உணவையும் கொஞ்சம் சேர்த்துக்கொள்ளலாம். மற்ற குப்பைகளை ஒதுக்கிவிடலாம்.

இந்தப் பயிற்சியின் மூலம் இதயத்துக்கும் நுரையீரலுக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி கிடைக்கிறது. உடல் எடையைக் குறைக்கவும் பயன்படுகிறது. 

உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் குறைப்பதற்குப் பயன்படுவது போலவே எடை குறைவானவர்கள் தங்களின் எடையை உயர்த்திக் கொள்ளவும் இதே பயிற்சி உதவும்.
காரணம் இந்தப் பயிற்சியின் காரணமாக எதனால் எடைக் குறைபாடோ அந்தக் குறைபாடு சரி செய்யப்பட்டு தேவையான அளவு எடை அதிகரிக்கும்.

ஆக இதயத்துக்கும் நுரையீரலுக்கம் இரண்டுக்கும் சேர்த்து ஒரே பயிற்சியான இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். முடிந்தால் நடைப் பயிற்சியைப்போலவே மெது ஒட்;டப் பயிற்சியையும் இதே முறையில் செய்யலாம்.

எல்லாம் உடல்நலத்துக்கு நல்லதே!

No comments:

Post a Comment