ss

Friday, June 1, 2012

உலகநலன் ( 1 )

A P J அப்துல் கலாம் அவர்களுக்கு எழுதிய ஒரு கடிதம் 


நண்பர்களே! கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்பாக நான் திரு அப்துல் கலாம் அவர்களின் பெரும்புகழைப் பயன்படுத்தி உலகளாவிய ஒரு வழிகாட்டும் அமைப்பை ஏன் உருவாக்கக் கூடாது என்று சிந்தித்ததன் பயனாக இப்படி ஒரு கடித்தத்தை மின்னஞ்சல்மூலமாக  அனுப்பினேன். 

அது அவருக்குப் போயிற்றா அவர் படித்தாரா என்றெல்லாம் எனத்துத் தெரியாது. ஆனால் எனக்கு எந்தப் பதிலும் வரவில்லை. பதில் அனுப்புமளவு நான் முக்கியமான நபராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் என்னுடைய கனவு அவருடைய கனவுகளுக்கு மாற்றுக் குறைந்தது அல்ல. 

எனது இந்தக் கனவை ஏன் சமூக வலைத் தளமான முகநூல் மூலமாகவே உலகுக்கு வெளிப்படுத்தக் கூடாதென்றுஎனக்கு இப்போது ஒரு ஆசை திடீரெனப் பிறந்தது. அதை இப்போது செயல்படுத்தியும்விட்டேன். 

எனக்கு ஒரு மனத் திருப்தி! அவ்வளவே!(கடிதம் கீழே)
---------------------------------------------------------------------------------------------------------------------------------

அனுப்புனர்:கே.சுபாஷ்(இயற்பெயர்:கே.கிருஷ்ணசாமி)

சித்திரச்சோலை,தெற்குத்தோட்டம்,

உரல்பட்டி, (அஞ்சல்)642204
உடுமலைப்பேட்டை,(தாலூகா)
திருப்பூர்(மாவட்டம்)
தமிழ்நாடு 

பொருள்: ஓர் உயர்ந்த வேண்டுகோள்……


 அன்புள்ள ஐயா திரு.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களுக்கு வணக்கம். 


நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என்றும் அதனால் உலகம் பயனுற வேண்டும் என்றும்

வாழ்த்துகிறேன்.   


 ஐயா! நான் யார் என்று முதலில் தெரிவிக்க வேண்டும். தங்களுக்கு

எதற்காக இக்கடிதம் எழுதினேன் என்றும் சொல்ல வேண்டும். அப்போதுதான்

இக்கடிதம் மதிக்கத் தக்கது தானா என்று முடிவுசெய்ய முடியும்.  மக்கள் அனைவராலும் ஒருமுகமாக மதிக்கப்படும் தங்கள் மேல் நானும்

மதிப்பு வைத்துள்ளேன். குற்றமற்ற ஓர் குடிமகன் என்பதும் அனைத்து மக்களும்

அனைத்து உயிர்களும் சிறப்புற வாழவேண்டும் என்ற ஓர் எண்ணத்தைத் தவிர வேறு
எண்ணங்களுக்கு முக்கியத்துவம் தராதவன் என்பதும் தங்களுக்குக் கடிதம்
எழுதுவதற்கு எனக்குரிய தகுதியாகக் கருதுகிறேன். 


அதைத் தாங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் எதிர்கால இந்தியாவைப் பற்றியும் அதை ஒருவல்லரசாக்குவது

பற்றியும் ஆழ்ந்த அக்கரை கொண்டுள்ளீர்கள் என்பது தெரியும்.

அதைப்புகழ்ந்து முகஸ்துதி செய்வது என்னுடைய நோக்கம் அல்ல.  உங்களுடைய நற்பெயரும் புகழும் அறிவாற்றலும் ஒருசிறு வட்டத்துக்குள்

பயன்படுவதோடு நிற்காமல் அல்லது வீணாகாமல் உலகளாவிய உயர்நத

நோக்கங்களுக்குப் பயன்பட வேண்டும் என்று பேராசைப்படுகிறேன்.  உங்களை ஒருநண்பராக அடைவதற்கான தகுதிகள் என்க்கு உள்ளனவா என்று

எனக்குத் தெரியாது. ஆனால் அத்தகைய வாய்ப்புக் கிடைக்குமென்றால்

இப்பூவுலகில் நிகழ்கின்ற வேண்டாத தீங்குகள் அனைத்தையும் இல்லாமல் செய்வது
எப்படி என்பதுபற்றி சிறிது நேரம் உரையாடலாம் என்று விரும்புகிறேன்.  நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற உலகைவிட மோசமான உலகில்தான் நாம்

வாழ்வதாக நான் எண்ணுகிறேன். காலம் காலமாகக் கிராமங்களில் பயன்;பட்டுவந்த

நன்னீர்க் கிணறுகளெல்லாம் சில ஆண்டுகளிலெயே பயனற்றுப் போய்விட்டன.
அவற்றில் நிறையக் கிணறுகள் விஷநீர்த் தொட்டிகளாகி விட்டன.
   நச்சுக் காற்றும் நஞ்சு கலந்த உணவும் உண்டு எவ்வளவு காலம்
தாக்குப்பிடிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை.  நாம் வாழும் உலகை உயிரின வாழ்வுக்குத் தகுதியற்றதாக்கிவிட்டு எங்கு

போய்த் தப்பித்து வாழப் போகிறோம்?   


அறிவியல் என்பது மனிதஇனத்தின் மேம்பாட்டுக்கா? அல்லது மனித இனத்தின்

ஒட்டுமொத்த அழிவைத் துரிதப்படுத்தவா?  மற்ற உயிரினங்களைவிட உயர்ந்த இனமாக நம்மை நாமே எண்ணிக்கொள்கிறோம்.

ஆனால் வேறெந்த இனமும் செய்யத் துணியாத தன்னினத்தைத் தானே கூட்டங்

கூட்டமாகக் கொல்லும் போர்களைக் காலங் காலமாக பல்வேறு காரணங்களின் பேரால்
நடத்திக் கொண்டுதான் உள்ளோம். 


இது எந்த வகையில் உயர்ந்த நாகரிகத்துக்குப் பொருந்தும்?  


 மனிதனுக்கு மனிதன், ஊருக்கு ஊர், மதத்துக்கு மதம், நாட்டுக்கு நாடு

உள்ள முரண்பாடுகளைத் தவிர்த்து அழியப் போகும் உயிரன வாழ்வை அழிவிலிருந்து

காப்பாற்றி அறிவியலை அழிவுப் பாiதையிலிருந்து சரியான பாதைக்குத் திசைமாற்ற உங்களைப் போன்ற அறிவியலாளர்களும் மனிதாபிமானிகளும் முயன்றால் ஏன் முடியாது?

 சுயநல அரசியலும் ஆதிக்க மனப்பான்மையும் மக்களின் அதிலும்

கற்றவர்களின் அறியாமையும் தான் நல்ல சிந்தனைகளுக்கு உள்ள தடையாகக்

கருதுகிறேன்.  


எனவே சரியான அரசியல் கல்வியையும் ஒட்டுமொத்த உலகினைக் காக்கும்

உயர்ந்த பண்பாட்டுக் கல்வியையும் உலக சமுதாயத்துக்குப் புகட்டணே;டிய கடமை

உங்களைப் போன்ற நல்லோர்க்கு இருப்பதாகவே எண்ணுகிறேன். 

அதற்காக உலகின் மிகச்சிறந்த தங்களைப் போன்ற உயர் பெருமக்களைக் கொண்ட ஓர் அமைப்பை உருவாக்க நீங்கள் முன்முயற்சி எடுக்க வேண்டுமென நல்லுணர்வு கொண்ட மனிதன் என்ற உரிமையில் வற்புறுத்த விரும்புகிறேன்.

  அந்த அமைப்பு உலக மக்களுக்கு சரியான வழிகாட்டக்கூடிய மிக உயர்ந்த

அமைப்பாக விளங்க வேண்டும். மனித இனம் அழிவுப் பாதையில் இருந்து விலகி

என்றென்றும் சமாதானாக வாழ அனைத்துலக மக்களும் ஏற்றுக்கொள்ளத் தக்க ஓர்

சி;த்தாந்த அடிப்படையை உருவாக்க வேண்டும். 

அது பாய்ச்சும் ஒளியில் உலகவாழ்வு ஒரு குடும்பவாழ்வு போன்றும் உலகமே ஒரு குடும்பம் போன்றும் மாறியமைய வேண்டும். பகைமை என்பதும் போர் என்பதும் ஆயுதங்கள் என்பதும்

உலகம் அறியாத ஒன்றாக வேண்டும். உலகம் ஒரு விளையாட்டு மைதானமாகவும்

பசுமைநிறைந்த சோலையாகவும் விளங்கவேண்டும். இத்தகைய மகத்தான விருப்பத்தைக் கொண்டுள்ள நான் ஓர் கல்வியாளனோ

புகழ்பெற்ற நபரோ அல்ல. தினசரி வாழ்வுக்கே பெரும் போராட்டம்

நடத்திக்கொண்டிருக்கும் ஒரு சாதாரண மனிதன் ஆவேன். ஓர் சின்னஞ்சிறு
கிராமத்தில் இருந்துகொண்டு அப்பாவி மக்களிடையே வாழ்ந்துகொண்டு இப்படி ஒரு
கனவைத்தான் காணமுடியுமே தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை. இத்தகைய ஓர்விருப்பத்தைத் தங்களிடம் வெளிப்படுத்தியதன் மூலம் உலக

மக்களுக்கு நான் செய்ய விரும்பிய மகத்தான பணியில் ஒரு சிறியபங்கை

ஆற்றியதாகவே கருதுகிறேன். நான் விரும்பும் ஓர் அமைப்பு தங்கள்
முன்முயற்சியால் உருவாகுமானால் அதுதான் தங்கள் வாழ்வில் மிகப்பெரும்
பேராக இருக்கும் என்று கருதுகிறேன். தங்களிடம் உரையாடும் வாய்ப்பு கிடைக்குமெனில் உலகமக்களின்

மேன்மைக்குப் பயன்படும் பல உயாந்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள

விரும்புகிறேன். ஆங்கில ஞானம் பெறும் அளவு உயர்கல்வியை நான் கற்கவில்லை.
ஆனால் தமிழில் எந்த ஒரு விசயத்தையும் பற்றி அறிவியல் கண்ணோட்டத்தில்
இருந்து பேச என்னால் இயலும் என்றே கருதுகிறேன்.  உலகை உயர்ந்த தரத்துக்கு இட்டுச்செல்லும் பல்வேறு கோட்பாடுகளை என்

சொந்த சிந்தனையில் இருந்தும் வாழ்க்கை அனுபவங்களில் இருந்தும் உருவாக்கி

வைத்துள்ளேன். அது அறிவியலாளர்கள்கூட எதிர்பார்க்காத ஒன்றாகக்கூட
இருக்கலாம். அதையெல்லாம் பற்றிக் கலந்துரையாட அதற்குத் தகுதிவாய்ந்த ஒரு
நண்பர் இதுவரை கிடைக்கவில்லை. 

என்னைவிட இருபதுவயது வயதால் மூத்தவரும் சமுதாய நோக்கில் எட்டமுடியாத உயரத்தில் இருப்பவருமாகிய தங்களை மற்றவர் துதி பாடிக்கொண்டிருக்கும் நேரத்தில் நான் ஒரு நண்பராகத் கருதுவது தங்கள்மனதில் என்னைப்பற்றி என்னமாதிரி எண்ணத்தை உண்டுபண்ணும் என்பதுதெரியவில்லை.

தங்களுக்கு நேரம் கிடைத்தால் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு

பேசுவது தங்களின் உயர் மாண்புகளுக்கு எந்த வகையிலும் உகந்ததுதான் என்றே

கருதுகிறேன். வணக்கம்.

தங்கள்அன்புள்ள


கே.சுபாஷ்


5.8.2010 

No comments:

Post a Comment