ss

Sunday, June 10, 2012

அரசியல் ( 13 )


செத்தும் கெடுப்பான்

நமது நாட்டைப்பிடித்த வியாதிகளில் முக்கியமான ஒன்று செத்துப்போன தலைவர்களைப் புகழ்பாடுவது. 

அவர் வாழும்பொது எப்படிப்பட்டவராக வாழ்ந்தார் என்பது தெரியாமலேயே வானளாவப் புகழ்வது பழக்கமாகிவிட்டது. 

ஒருவர் உயிரோடு இருக்கும்போது அவருடைய சமூக வாழ்வு எத்தகையவர்கள் உருவாகக் காரணமாக இருக்கிறது என்று பார்க்கவேண்டும்.

ஒருவர் இறந்த பின்னால் அவர் எப்படிப்பட்டவர்கள் உருவாகக் காரணமாக இருந்தார் என்று சிந்திக்கவேண்டும்.

அப்போதுதான் அவர்களைப் பற்றிய உண்மையான மதிப்பீடு கிடைக்கும். 

அதைவிட்டு வாழும்போது விஷக் கிருமிகளை உருவாக்கிவிட்டுச் சென்றவர்களை, மக்களைக் கொள்ளையடிப்பவர்கள் உருவாகக் காரணமாக இருந்தவர்களை நாடு குட்டிச் சுவராகப் போக் காரணமாக இருந்தவர்களை எல்லாம் தியாகிகளாகவும் மக்களுக்காகவே வாழ்ந்தவர்களாகவும் சித்தரிப்பது நல்லது அல்ல. 

அது இப்போதும் அத்தகைய போலிகள் உருவாக் காரணமாகத்தான் அமைகிறது. சமூக விரோதிகள்கூடப் பெரிய தலைவர்கள் ஆக உதவி செய்கிறது. 

சுருக்கமாகச் சொன்னால் தண்டனைக்குரிய குற்றவாளிகள் எல்லாம் இன்று தியாகிகளாகப் போற்றபட்டு அரசியல் ரீதியாகக்கூட விமர்சனம் செய்யப்படுவதில்லை. அவர்கள் செத்துப்போனதைத் தவிர நாட்டுக்காகச் செய்த நன்மை ஒன்றும் இருக்காது. 

விதைகள் தாங்கள் அழியும் முன் தங்களைப்போல பல விதைகள் உருவாகக் காரணமாக சில நாற்றுக்களை விட்டுவிட்டு மறைகின்றன. ஆனால் இவர்களோ எண்ணற்ற விஷவிதைகளை உருவாக்கிவிட்டு மறைகிறார்கள். செத்தும் கெடுப்பவர்கள் இவர்கள்.

வாழ்பவர் ஆயினும் மறைந்தவர் ஆயினும் ஒருவரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும்  அடிமைப் புத்தி; மாறவேண்டும்.

2 comments:

  1. செத்து போன தலைவர்களை நினைப்பதை விட அவர் கடை பிடித்த கொள்கைகளை வாழ்வில் கடைபிடித்து வருவது தான் சிறந்தது.
    ஆனால் இப்போது பணம் கொடுத்தால் இறந்து போன ரௌடிகள் கூட பெரிய தலைவர்களாக கொண்டாடபடுகிறார்கள்.
    இதுதான் இறந்த தலைவர்களை நினைத்து பார்த்த பழக்கத்தின் விளைவாய் இருக்கிறது. வெட்க கேடு.

    ReplyDelete
  2. ஆம் நண்பரே! இந்தச் சாபக்கேட்டை ஒழிக்காமல் எப்படி நாடு உருப்படப்போகிறது!....

    ReplyDelete