ss

Tuesday, June 12, 2012

அரசியல் ( 14 )


எது ஜனநாயகம் 

கொலைகாரர்கள், கொள்ளைக்காரார்கள், மோசடிப் பேர்வழிகள், லஞ்சம் வாங்குபவர்கள், ஒழுக்கம் கெட்டவர்கள், இரக்கமில்லாதவர்கள், காட்டிக் கொடுப்பவர்கள், துரோகிகள், பாலியல் வன்முறையாளர்கள், தன்மானமின்றி ஏவிவிட்டபடி எல்லாம் பாதகம் செய்பவர்கள், சமூக விரோதிகள், மக்களின் துன்ப துயரங்களுக்குக் காரணமானவர்கள் இவர்கள் எல்லாம் இருக்கவேண்டிய இடம் சிறைச்சாலை!

இவர்கள் அடைய வேண்டியது கடும் தண்டனைகள்!

இவர்கள் எண்ணவேண்டியது சிறைக் கம்பிகளையும் வாழும் நாட்களையும்! 


ஆனால் இவர்களெல்லாம் எம் எல் ஏ க்களாகவும் எம் பி க்களாகவும் மத்திய மாநில மந்திரிகளாகவும் ஆக முடிகிறது!

இவர்களெல்லாம் அப்படி ஆவதற்கு சட்டங்கள் அனுமதிக்கின்றன. இவர்கள் மக்களின் வாழ்க்கையோடு விளையாடுவதற்குச் சட்டங்கள்  அனுமதிக்கின்றன. மக்களைச் சூரையாடுவதற்கு சட்டங்கள் அனுமதி;ககின்றன. திருடர்கள் மக்களை ஆள்வதற்கும் அனுமதிக்கின்றன.   

அப்படிப்பட்ட சட்டங்களை உருவாக்குவதற்கு, மக்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வதற்கு நடைபெறும் தேர்தல் முறைக்குப் பெயர் ஜனநாயகமா?

வெறிநாயை அடிப்பதுபொல் அடிக்கவேண்டிய சமூக விரோதி ஒருவன் தன்பெயரைச் சத்தியமூர்த்தி என்று வைத்துக்கொண்டால் அவனை அடிக்காமல் மிதிக்காமல் துவைக்காமல் மகான் என்று போற்றலாமா?

அதுபோல ஒழித்துக்கட்டப்பட வேண்டிய ஏமாற்று வேலைகளுக்கெல்லாம் ஜனநாயகம் என்று பெயர் வைத்துவிட்டால் அதற்குக் காலம் காலமாகப் பணிந்தேதான் போக வேண்டுமா?

உண்மையான ஜனநாயகம் என்றால் என்ன என்று கண்டறிய வேண்டாமா?

எமாற்றுவதும் ஏமாறுவதும்தான் ஜனநாயகம் என்று இன்னும் எத்தனைகாலம் நம்பிக்கொண்டு இருக்கப்போகிறோம்?

2 comments:

  1. இவர்கள் எம் எல் எ ஆக அனுமதிப்பது சட்டம் அல்ல.. மக்கள் தான்.
    எம் எல் எ ஆக போட்டி இடுவதற்கு அனுமதிப்பது தான் சட்டத்தின் தவறு

    ReplyDelete
  2. போட்டியிட அனுமதிப்பது சட்டத்தின் தவறு என்றால் அந்த சட்டத்தை விட்டு வைப்பதும் தவறுதானே நண்பரே?....

    ReplyDelete