ss

Wednesday, June 6, 2012

உணவே மருந்து ( 17 )


எது சிறந்தது?

நண்பர்களே! சமைக்காமல் இயற்கையாக அப்படியே சாப்பிட்டால் செரிமானம் ஆகாது, பல நோய்களுக்குக் காரணமாகிவிடும் என்ற ஒரு தவறான கருத்து பலரிடம் உள்ளது.அவர்கள் கவனத்துக்காக இதைச் சொல்கிறேன்.

நெருப்பின் பயனை மனிதன் அறிந்தபின்னால்தான் சமைத்துச் சாப்பிடும் பழக்கம் ஏற்ப்பட்டது. 

அதற்கு முன் பல லட்சம் ஆண்டுகள் சில கோடி ஆண்டுகள் - என்றுகூட சொல்லலாம் - இயற்கையாகக் கிடைத்தவற்றைத் தான் உண்டு வாழ்ந்திருக்கிறோம். 

ஏன் இன்றும்கூட மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமும் சமைத்து உண்பது இல்லை!

மனிதன்கூட இப்போதும் வாய்க்கு சுவையான கனிகளைச் சமைத்து உண்பது இல்லை.

ஆக சுவை குறைவானதை வாய்க்கு சுவையைக் கூட்டுவதற்க்காகத்தான் சமைக்கிறோமே அல்லாமல் உடல் நலன் கருதி அல்ல. 

இயற்கை உணவுக்கு நிகர் இயற்கை உணவுதான் என்பதை அனைவரும் உணர வேண்டும்!

1 comment:

  1. நல்ல பதிவு ! தொடருங்கள் ! நன்றி !

    ReplyDelete