அலோபதியும் நாமும்
இயற்கை உணவையும் இயற்கை மருத்துவத்தையும் பாராட்டுகிறேன் பேர்வழி என்று அலோபதி மருத்துவத்தை நர்நாராகக் கிழிப்பதுதான் தங்கள் பணி என சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இயற்கை வாழ்வு முறையின்மேல் உள்ள பற்றும் இயற்கை உணவு,இயற்கை மருத்துவம், மற்றும் பக்க விளைவுகள் அற்ற பிற மருத்துவங்களின்மேல் உள்ள மரியாதை அலோபதி மருத்துவத்தின் தவறான பயன்பாட்டின்மேல் உள்ள வெறுப்பு, பக்கவிளைவுகள் ஆகியவைதான் அதற்குக் காரணம்.
அதற்காக அதன் சாதனைகளைப் புறக்கணித்து எதிர்ப்பது நியாயம் ஆகாது. அதன் தேவைதான் அதை அந்த அளவு உயர்த்தியிருக்கிறது.
மக்கள் கண்மூடித்தனமாக அலோபதி மருத்துவத்தை நம்புவதால்தான் அது இன்று தன்னிகரற்று விளங்குகிறது.
ஆனால் அதற்காகும் செலவுகளும் பக்கவிளைவுகளும் கொடுமையானவை. சாதாரணமக்களுக்கு கட்டுபடி ஆகாதவை.
எனவே அவசர சிகிச்சைக்காகவும் நவீன அலோபதி சிகிச்சைதவிர வேறு வழி இல்லை என்கிற நோய்களுக்காகவும் மட்டும் அலோபதி மருத்துவத்தைப் பயன்படுத்திக் கொள்வோம். மற்ற சாதாரண நோய்களுக்கெல்லாம் பக்கவிளைவுகள் அற்ற இயற்கை மருத்துவம் பாரம்பரியமான சித்த மருத்துவம் முதலியவற்றைப் பயன்படுத்துவோம்.
அக்கு பஞ்சர் பற்றிய தெளிவான விபரங்கள் இல்லாததால் குறிப்பிட இயலவில்லை. அதுபற்றி நண்பர்கள் விரிவாக ஆராயலாம்.
உடலால் வருந்தும் நிலை ஏற்படாதவாறு வருமுன்னர் தடுக்கும் விதமாகவும் ஆரோக்கியமான வாழ்வை உறுதிப்படுத்தும் விதமாகவும் இயற்கை உணவையும் இயற்கை வாழ்வுமுறையையும் பின்பற்ற உறுதி கொள்வோம்!
No comments:
Post a Comment