பழைய சோறும் பஞ்சாமிர்தமும்
இன்று எனது பகல் உணவு என்ன என்று சொல்லட்டுமா?...சொன்னால் பொறாமைப்படக்கூடாது! சொல்லிட்டேன்!
பழைய சோறும் பஞ்சாமிர்தமும்!
ஆமாம் கனிந்த வாழைப்பழங்கள் இருந்தன. அத்தோடு பேரீச்சம் பழங்களும் நாட்டுச் சர்க்கரையும் கல்கண்டும் ஏலக்காயும் நெய்யும் சேர்த்துப் பஞ்சாமிர்தம் ஆக்கிவிட்டார்கள்!
அத்தோடு வெங்காயத்தோடு கூடிய பழைய சோறும் சேர்த்துப் பகலுணவாகக் கொடுத்தனுப்பிவிட்டார்கள்.
பழைய சோறு ஐந்து ரூபா போடலாம். பஞ்சாமிர்தம் பதினைந்து ரூபாய் என்று வைத்துக்கொண்டாலும் இரண்டும் சேர்ந்து ஒரு ஆளுக்கு இருபது ரூபாய்தான் பணமதிப்பு ஆகிறது!
ஆனால் நவீன ஓட்டலுக்குப் பொய் இருநூறு ரூபாய்க்கு உண்டாலும் இந்த நன்மை கிடைக்குமா?
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று
என்ற குறள் வாய்ச் சொல்லுக்கு மட்டுமல்ல உண்ணும் உணவுக்கும் பொருந்தும்!
ஒரு வினாடி சிந்திப்போமே!
No comments:
Post a Comment