இச்சி நானி இல்லி ராஜா
====================
இப்படி ஒரு பெயரை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? நான் கேள்விப்பட்டேன்!
நான் நேற்று இரவு தொலைகாட்சி யில் இப்படி ஒரு செல்லக்குரல் கேட்டதும் அது என்னன்னு பார்க்கப் படுத்திருந்தவன் எழுந்து வேகமாகப் போனேன்.
நிகழ்ச்சிபற்றி சொல்லிக்கொண்டிருந்த பெண் தான் வாங்கும் சம்பளத்துக்குத் தக்கபடியும் தொலைக்காட்சி நாகரிகத்துக்குத் தக்கபடியும் உடையும் தலை அலங்காரமுமாக சகிக்க முடியாமல் நெளிந்து நெளிந்து என்னமோ பேசிக்கொண்டிருந்தார்.
நிகழ்ச்சி போட்டபின்தான் தெரிந்தது இசைஞானிஇளையராஜாதான் இச்சி நானி இல்லிராஜா ஆகியிருக்கிறார் என்று!
தமிழ் இந்தத் தொலைக் காட்சிகளிடம் இருந்து தப்பிப் பிழைக்குமா?
No comments:
Post a Comment