ss

Saturday, June 9, 2012

உணவே மருந்து ( 20 )


உடல்குப்பை

ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரில் பாசி படிவதில்லை. 

குட்டையாகத் தேங்கும் தண்ணீரில்தான் பாசி படிகிறது. 

அதுபோல உடம்புக்குத் தகுந்த அளவு உழைப்பு இருப்பின் ஊளைச்சதை ஏறி உடம்பு பெருக்காது. 

உழைக்காமல் இருப்பின் தேவையான அளவுபோக அதிகப்படியாக மீந்திருக்கும் சத்துக்கள் அதிக வேலையில்லாமல் இருக்கும் உடல் பாகங்களில் ஊளைச்சதையாக மாறித் தங்கிவிடும். 

உண்மையில் அது உடம்புக்குத் தேவையில்லாத குப்பையாகவே கருதப்படவேண்டும்.

நாம் உடம்பில் சேர்க்கும் அதிகப்படியான சத்துக்கள்மூலம் அதிகப்படியான சதைப்பகுதிகள் சிரமம் இல்லாமல் உருவாகிவிடும். 

ஆனால் அப்படி உருவான பின்பு அதற்கும் சேர்த்து உண்ணவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி விடுகிறது. 


அதிகப்படியான சதைப் பகுதிக்கும் சேர்த்து உண்பது தவிர்க்க முடியாததாகிவிடும்.

செரிமான உறுப்புக்கள், சுவாச உறுப்புக்கள், இதயத்தின் பாகங்கள், பல்வேறு சுரப்பிகள் இவையெல்லாம் அவற்றின் சக்திக்குமேல் இயங்கவேண்டி வரும்.

அதனால் இயல்பான ஆரோக்கியநிலை கெட்டு நோய்வாய்ப்படும் வாய்ப்புக்கள் அதிகமாகி விடுகின்றன. 

அதிகப்படியான எடையையும் சேர்த்துச் சுமக்கவேண்டிய அவசியம் கால்களுக்கு ஏற்படுவதால் வேகமாக நடக்கவோ ஓடவோ விளையாடவோ முடிவதும் இல்லை. 

நாம் இன்பமாக எண்ணி உண்ணும் அதிகப்பபடியான உணவு நம்மையே துன்பத்தில் தள்ளிவிடுகிறது.

1 comment:

  1. தேங்கி நிற்க்கும் ஆழ் கடல்லிலும் பாசி படியாது, அலைபாயும் கரையோரத்தில் நுரை தள்ளும்...

    ReplyDelete