ss

Saturday, June 2, 2012

எனது மொழி ( 31 )

கவலை  

உயர்ந்த சிந்தனை உடையவர்களும் உயர்தர்ம நெறிகளைப் பின்பற்றுபவர்களும் கவலைப்பட நேரும்போது முதலில் அத்தகைய கவலைக்குத் தாமும் பொறுப்பு என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். 

ஆதாவது அத்தகைய கவலைப்படும்படியான நிலைமை ஏற்பட நாம் காரணமாய் இருப்பின் அந்தத் தவற்றை எண்ணி வருந்த வேண்டும். 

அதைத் தொடர்ந்து அந்தத் தவற்றைத் திருத்திக்கொள்ள வேண்டும். 



நாம் காரணமாக இல்லாவிட்டால் அத்தகைய நிலைக்காக, நாம் செய்யாத தவறுக்காகக் கவலைப்படுவதே தவறு என்பதை உணரவேண்டும்.

உடனடியாக மனதை அமைதி நிலைக்குக் கொண்டு சென்றுவிட வேண்டும். 

ஆதாவது ஒன்று, தவிர்த்திருக்கவேணடியதைச் செய்தது தவறு. அல்லது நாம் காரணமல்லாத தவறுக்காக கவலைப்படுவது தவறு. 

ஆக கவலை என்று எப்போது வந்தாலும் அதில் நமது பங்கு நிச்சயம் இருக்கும். 

தவறின் தன்மை எத்தகையதாக இருப்பினும் அதை உணர்ந்து திருத்திக்கொண்டு உடனே அமைதி நிலைக்குத் திரும்பிவிட வேண்டும். 

1 comment:

  1. தவறின் தன்மை எத்தகையதாக இருப்பினும் அதை உணர்ந்து திருத்திக்கொண்டு உடனே அமைதி நிலைக்குத் திரும்பிவிட வேண்டும்


    அருமை ஐயா..

    ReplyDelete